#image_title
பிரபல நடிகரான தனுஷ் இயக்கி நடித்த ராயன் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீசானது. இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம், சந்திப் கிஷன், செல்வராகவன், பிரகாஷ்ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த நிலையில் படம் குறித்த ப்ளூ சட்டை மாரன் கூறியதாவது 14 வயசு சிறுவனாக இருக்கும் தனுசுக்கு இரண்டு தம்பிகள், ஒரு தங்கச்சி. தனுஷின் அம்மா அப்பா எங்க போனாங்க என்ன ஆனாங்கன்னு தெரியல. ஒரு கும்பல் தனுஷின் தங்கச்சியை கடத்த வராங்க.
அப்போது ஹீரோ ஒரு கொலை பண்ணிட்டு தம்பி தங்கச்சியுடன் சென்னைக்கு வந்து கஷ்டப்பட்டு அவர்களை வளர்த்து ஆளாக்குகிறார். போலீஸ் அதிகாரியாக வரும் பிரகாஷ்ராஜ் ரவுடிகளை ஒழிக்க வேண்டும் என திட்டம் போட்டு இரண்டு கும்பலையும் தூண்டி விடுகிறார். அந்த கும்பலில் தனுஷின் தம்பி மாட்டிக்கொள்கிறார். தம்பியை காப்பாற்றுவதற்காக தனுஷ் களத்தில் இறங்குகிறார். அதன் பிறகு என்ன ஆச்சு என்பதுதான் ராயன் படத்தின் கதை. முதல் பாதி நன்றாக தான் இருக்கிறது. ஆனால் இரண்டாவது பாதியில் படம் எதை நோக்கி போகிறது என்று தெரியவில்லை.
எஸ் ஜே சூர்யா வில்லனா சரவணன் வில்லனா அல்லது ஹீரோ கூட இருப்பவர்கள் தான் வில்லனா என்பது பெரிய குழப்பமா இருக்கு. ராயன் படம் இரண்டாவது பாதி மெதுவாக நகர்ந்து போகிறது. படம் எப்படா முடியும் என நினைக்கும் அளவுக்கு ஆகிறது. பேசாம படத்துக்கு குத்தூசி கோவிந்தன் என்று பெயர் வைத்திருக்கலாம். வில்லனை பழிவாங்குவதற்காக எப்போதும் கையில் ஒரு குத்தூசியை வைத்துக்கொண்டு அவர் அலைகிறார். படத்தில் நடிச்ச ஹீரோ நிம்மதியா இல்ல. வில்லன் நிம்மதியா இல்ல. படம் பாக்குற நாமும் நிம்மதியா இல்ல. இப்படி படம் முழுக்க அவலமா இருக்கு. ராயன் படத்தை மாதிரி தான் சுப்ரமணியபுரம் படமும்.
அந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரம் எல்லாம் இறந்து விடுவார்கள். நம்பிக்கை துரோகம் பண்ணுவாங்க, அடுத்தடுத்து கொலைன்னு ஒரே அவலமா போய்கிட்டு இருக்கும். ஆனா கிளைமாக்ஸ்ல எல்லாரும் அப்படி இருக்க மாட்டான். ஒரு சில நேர்மையாக இருப்பான். நட்புக்காக உயிரை கொடுப்பான் அப்படின்னு தப்பு பண்ணவரை ஒருத்தன் கொலை பண்ணுவான். அந்த திருப்தியோட நம்ம படம் பார்த்துட்டு வெளியே வருவோம். அந்த திருப்தியை கூட ராயன் படம் கொடுக்கல. ஆக மொத்தம் சரியான திரைக்கதை இல்லாததால படம் ரெண்டு கெட்டா படமா போயிருச்சு என கூறியுள்ளார்.
#image_title
கொச்சி கடவந்தரா காவல் நிலையத்தில் 2025-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஒழுக்கக்கேடான மனித கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியாக அக்பர்…
சுள்ளியாவின் ஸ்ரீராமப்பேட்டையில் உள்ள சாலையோரக் குடிநீர் திட்டப் பணிகளின் போது, திறந்தவெளி சாக்கடையில் சிறுவன் ஒருவன் விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர்…
தெருவில் தனது பேரக் குழந்தையை கைகளில் ஏந்தியவாறு நடந்து சென்ற முதியவர் ஒருவரை, அங்கு நின்றுகொண்டிருந்த வெறி கொண்ட காளை…
பகலூர் சாலையில் உள்ள அமேசான் அலுவலகப் பகுதியில் அண்மையில் நிகழ்ந்த எதிர்பாராத வெடிவிபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது…
மதுரை அரசு மருத்துவமனையில் காயமடைந்த தனது நண்பனுக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்கக் கோரி இளைஞர் ஒருவர் கடும் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.…
பெண்களுக்கான முக்கியத்துவமும் உரிமைகளும் பெண்களை மேன்மைப் படுத்துவதற்காகத்தானே தவிர, மற்றவர்களை வன்முறையால் ஒடுக்குவதற்காக அல்ல. பொதுவெளியில் நடைபெறும் இதுபோன்ற சம்பவங்கள்,…