#image_title
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அமலாபால். இவர் முன்னணி நடிகர்களான விஜய், தனுஷ் உள்ளிட்டோருடன் இணைந்து நடித்துள்ளார். கடந்த ஆண்டு அமலாபால் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த ஜூன் மாதம் 11- ஆம் தேதி தான் அமலாபாலுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அடிக்கடி தனது கணவருடன் இருக்கும் புகைப்படங்களை அமலாபால் சோசியல் மீடியாவில் பதிவிடுவார். தங்களது மகனுக்கு இலாய் என பெயர் வைத்துள்ளதாக அமலாபால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருந்தார்.
பொதுவாக நடிகைகள் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்க மாட்டார்கள். ஒரு சில நடிகைகள் மட்டும்தான் திருமணத்தை தாண்டியும் சினிமாவில் தங்களது பயணத்தை தொடர்வார்கள். அந்த வகையில் அமலா பால் தனக்கு குழந்தை பிறந்த பிறகும் சினிமாவில் பிஸியாகவே வலம் வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அமலாபால் நடித்த ஆடுஜீவிதம் படம் வெளியாகி மக்களிடைய நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது மலையாளத்தில் லெவல் கிராஸ் என்ற படத்தில் அமலாபால் நடித்துள்ளார்.
இந்த படத்தின் ப்ரோமோஷன்காக கேரளா எர்ணாகுளத்தில் உள்ள தனியார் கல்லூரிக்கு சென்றுள்ளார். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அமலாபால் கருப்பு நிற ஷார்ட்ஸ் உடை அணிந்திருந்தார். அதனை பார்த்த நெட்டிசன்கள் மாணவர்கள் படிக்கும் கல்லூரிக்கு இப்படி கவர்ச்சியாக உடை அணிந்து வருவது சரியா எனக் கூறி மோசமாக கமெண்ட் செய்தனர். இந்த நிலையில் நடிகை அமலாபால் பிரச்சனை என்பது எனது உடையில் இல்லை உங்களது கேமராவில் உங்களது பார்வையில் தான் உள்ளது.
நான் ஷார்ட்ஸ் அணிந்து சென்றது சம்பந்தப்பட்ட கல்லூரி மாணவர்களுக்கு அசௌகரியத்தை கொடுத்ததாக தெரியவில்லை என கூறி நெடிசன்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். அவரது பதிவிற்கு ஆதரவாக பலரும் குரல் கொடுத்துள்ளனர். நடிகையாக இருந்தாலும் தனிநபராக இருந்தாலும் அவர்களது உடை பற்றி தகாத வகையில் கருத்துக்களை தெரிவிக்க கூடாது. அது கீழ்தரமான செயல். எந்த உடை அணிய வேண்டும் என தேர்ந்தெடுப்பது அவரவர் உரிமை. அதில் யாரும் தலையிடக்கூடாது எனவும் சோசியல் மீடியாவில் அமலாபாலுக்கு ஆதரவாக பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.
கொச்சி கடவந்தரா காவல் நிலையத்தில் 2025-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஒழுக்கக்கேடான மனித கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியாக அக்பர்…
சுள்ளியாவின் ஸ்ரீராமப்பேட்டையில் உள்ள சாலையோரக் குடிநீர் திட்டப் பணிகளின் போது, திறந்தவெளி சாக்கடையில் சிறுவன் ஒருவன் விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர்…
தெருவில் தனது பேரக் குழந்தையை கைகளில் ஏந்தியவாறு நடந்து சென்ற முதியவர் ஒருவரை, அங்கு நின்றுகொண்டிருந்த வெறி கொண்ட காளை…
பகலூர் சாலையில் உள்ள அமேசான் அலுவலகப் பகுதியில் அண்மையில் நிகழ்ந்த எதிர்பாராத வெடிவிபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது…
மதுரை அரசு மருத்துவமனையில் காயமடைந்த தனது நண்பனுக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்கக் கோரி இளைஞர் ஒருவர் கடும் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.…
பெண்களுக்கான முக்கியத்துவமும் உரிமைகளும் பெண்களை மேன்மைப் படுத்துவதற்காகத்தானே தவிர, மற்றவர்களை வன்முறையால் ஒடுக்குவதற்காக அல்ல. பொதுவெளியில் நடைபெறும் இதுபோன்ற சம்பவங்கள்,…