இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரஜினி, கமல், அஜித் மற்றும் விஜய் போன்ற பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை என்றாலும் சிவகார்த்திகேயன் நடித்த அமரன், கவின் நடித்த பிளடி பெக்கர், ஜெயம் ரவி நடித்த பிரதர் ஆகிய மூன்று திரைப்படங்கள் வெளியானது. தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த திரைப்படங்கள் அனைத்தும் தனித்துவமான கதைக்களத்தில் வெளியாகி உள்ளதால் ரசிகர்களும் திரைப்படங்களை பார்க்க ஆர்வம் காட்டுகின்றனர்.
அதன்படி சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் முதல் நாளில் உலக அளவில் 35 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியான கவின் மற்றும் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகியுள்ள பிளடி பெக்கர் மற்றும் பிரதர் ஆகிய திரைப்படங்களின் வசூல் குறித்த விவரம் வெளியாகி உள்ளது.
சிவகார்த்திகேயனுக்கு அடுத்தபடியாக விஜய் டிவி தொலைக்காட்சியில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்தவர் தான் நடிகர் கவின். கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் பிரபலமான இவர் தொடர்ந்து குறும்படங்களில் நடித்து வந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புகழ்பெற்றதன் மூலம் லிஃப்ட், டாடா மற்றும் ஸ்டார் ஆகிய திரைப்படங்களில் ஹீரோவாக நடித்த ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தற்போது நெல்சன் தயாரிப்பில் பிரபல இயக்குனரின் இயக்கத்தில் கவி நடித்த திரைப்படம் தான் பிளடிபக்கர். தீபாவளியை முன்னிட்டு வெளியான இந்த திரைப்படம் முதல் நாளில் 2.20 கோடி வசூலித்துள்ளதாக தெரிகிறது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து தீபாவளியை முன்னிட்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான திரைப்படம் தான். எம் எஸ் ராஜேஷ் இயக்கியிருந்த இந்த திரைப்படத்தை சுந்தர் ஆறுமுகம், கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் பிரைவேட் லிமிடெட் மூலம் தயாரித்துள்ளார். இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும் பூமிகா சாவ்லா, சரண்யா பொன்வண்ணன், யோகி பாபு மற்றும் ரோபோ சங்கர் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த திரைப்படத்தில் நடித்துள்ளது. ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த திரைப்படம் முதல் நாளில் 2.50 கோடி வசூலித்துள்ளதாக தெரிகிறது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…
திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…
சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…