அங்காடித் தெரு படத்தின் “அது அஸ்வினி இல்லடா குஷ்வினி” என்ற பல காமெடியான டயலாக் இன் மூலமாக வெளிவந்து மக்கள் மனதில் பிரபலமான பிளாக் பாண்டி அவர்கள், ஆரம்ப காலகட்டத்தில் கூடி வாழ்ந்தால் கோடி நன்மை படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகி. ஆட்டோகிராப் படத்தில் பள்ளி மாணவராக நடித்து பிரபலமானார்.
அதன் பின்னர் நாகேஸ்வரி, வெல்டன், சிங்காரச் சென்னை மற்றும் கில்லி உள்ளிட்ட படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர்,

மெட்டிஒலி, கோலங்கள் என மெகா ஹிட் அடித்த சீரியல்களில் நடித்துள்ள பிளாக் பாண்டி. லீ, முருகா, தீக்குச்சி உள்ளிட்ட படங்களில் அவர் நடித்தும் பெரிதாக மக்களிடையில் தெரியாமல் இருந்தபோதில், வசந்தபாலன் இயக்கிய அங்காடி தெரு திரைப்படம் மிகப்பெரிய பிரபலத்தை கொடுத்தது. படத்தில் நடித்த அஞ்சலி மட்டுமே தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக மாறினார். நாயகன் மகேஷ் மற்றும் பிளாக் பாண்டி உள்ளிட்டோர் அதிகமாக பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தனர்.

அதன் பின் கனா காணும் காலங்கள் சீரியலில் நடித்த பிளாக் பாண்டி விஜய் டிவி பிரபலங்களுடன் மிக நெருங்கிய நட்பை பழக்கத்தை வைத்திருந்தார். விஜய் டிவி மூலம் சிவகார்த்திகேயன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டது. வாய்ப்புகள் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்த நிலையில் சிவகார்த்திகேயனை நேரில் சென்று பட வாய்ப்பு கேட்டு சந்தித்துள்ளார். ஆனால் பட வாய்ப்பு ஏதும் தராமல், 20000 பணம் கொடுத்தார், ஆனாள் அது வேண்டாம் என திருப்பிக் கொடுத்துவிட்டு வந்துவிட்டதாகவும் சமீபத்திய பேட்டியில் பிளாக் பாண்டி கூறியிருந்தார்.

இந்நிலையில், இயக்குனர் ராஜசேகர பாண்டியன் இயக்கத்தில் உருவாகியுள்ள படத்தில் ஆரி அர்ஜுனனுக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்க உள்ளார். அப்படத்தில் பிளாக் பாண்டி கமிட் ஆகியுள்ளார். அப்பட பூஜை விழாவில் மழை அணிந்து நின்று கொண்டிருந்த பிளாக் பாண்டி அவர்கள் புகைப்படத்தை பார்த்த மக்கள், மீண்டும் திரைக்கு வருவதை பார்த்து ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

