தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் பட்டியல், அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு ஆதரவான தொண்டர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “என் மண், என் மக்கள்” நடைப்பயணம் மூலம் தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் தாமரையை கொண்டு சேர்த்த அண்ணாமலையின் பெயர் இந்தப் பட்டியலில் இடம்பெறாதது, தற்செயலான நிகழ்வாகத் தெரியவில்லை. மாறாக, அண்ணாமலையின் அதிரடி அரசியலை விரும்பாத மேலிடமும், அதிமுக போன்ற கட்சிகளுடனான உறவைச் சீர் செய்ய நினைக்கும் ‘லாபியும்’ இணைந்து திட்டமிட்டே அவரை ஓரங்கட்டியிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
வெளியான வேட்பாளர் பட்டியலை உற்று நோக்கினால், அதில் இடம்பெற்றுள்ள பெரும்பாலானோர் எடப்பாடி பழனிசாமியின் “குட் புக்”கில் இருப்பவர்களாகவே தெரிகின்றனர். குறிப்பாக, வானதி சீனிவாசன் (கோவை வடக்கு), தமிழிசை சௌந்தரராஜன் (மயிலாப்பூர்), எல். முருகன் (அவிநாசி) எனப் பல சீனியர் முகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிமுகவுடன் இணக்கமான போக்கைக் கடைபிடிக்கும் இவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டிருப்பது, அண்ணாமலையின் பிடிவாதமான ‘தனித்து போட்டி’ அல்லது ‘கடும் விமர்சன’ அரசியலுக்குக் கட்சிக்குள்ளேயே முட்டுக்கட்டை போடப்பட்டிருப்பதை உறுதி செய்கிறது.
அண்ணாமலையின் தீவிரமான செயல்பாடுகளால் தான் அதிமுக – பாஜக கூட்டணி முறிந்தது என்ற பேச்சு பரவலாக உள்ளது. தற்போது தேர்தல் நெருங்கும் வேளையில், எடப்பாடி பழனிசாமியின் நிபந்தனைகளுக்குப் பணிந்து, அண்ணாமலையை ஓரங்கட்டிவிட்டுப் பழைய பாணியிலான அரசியலை முன்னெடுக்கப் பாஜக மேலிடம் துணிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. “வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது” போல, கட்சியைத் தூக்கிப் பிடித்த தலைவருக்கே இன்று தேர்தல் களத்தில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பது கமலாலய வட்டாரத்தில் சலசலப்பை உருவாக்கியுள்ளது.
தன்னுடைய பெயர் விடுபட்டது குறித்து “நான் வெறும் பூத் ஏஜென்டாகப் பணியாற்றுவேன்” என அண்ணாமலை கூறியிருப்பது, அவரது தியாகமாகப் பார்க்கப்பட்டாலும், அதன் பின்னால் ஒரு காயம்பட்ட தலைவனின் சோகம் மறைந்திருப்பதாகத் தெரிகிறது. இந்த ‘எடப்பாடி-ஃப்ரெண்ட்லி’ வேட்பாளர் பட்டியல் பாஜகவிற்கு வெற்றியைத் தேடித்தருமா அல்லது அண்ணாமலை எனும் பிம்பத்தைச் சிதைக்குமா என்பது தேர்தல் முடிவுகளில் தெரிந்துவிடும். எது எப்படியோ, அண்ணாமலையின் அரசியல் எதிர்காலம் இப்போது ஒரு கேள்விக்குறியாக மாற்றப்பட்டுள்ளது மட்டும் நிதர்சனம்.
இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…
"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…
பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…
உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…
தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…