தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையுமாறு டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் ஆகியோருக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், 100 நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை நீக்கியது மிகப்பெரிய பிழையை பாஜக செய்திருக்கிறது என்று முன்னாள் ஒன்றிய அமைச்சர் சிதம்பரம் கூறியிருக்கிறார் . அவர்கள் திட்டத்தைக் கொண்டு வரும்போது காந்தி பெயரை அவர்கள் வைக்கவே இல்லை.
இப்போது மட்டும் காந்தி மீது எப்படி அக்கறை வருகின்றது? ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகிய இருவரும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய வேண்டும். என்னை பொருத்தவரையில் திமுக அரசு அகற்றப்பட வேண்டும். அதில் யார் வேண்டுமானாலும் வரலாம். அவர்கள் வரவேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம். கூட்டணிக்கு இன்னும் 90 நாட்கள் உள்ளது. அதற்குள் அதிக மாற்றங்கள் இருக்கிறது. வந்தவுடன் தெரிவிக்கின்றேன். இதுவரை நடிகர் தம்பி விஜயை பொறுத்தவரை ஒரு கவுன்சிலர் கூட ஆகவில்லை. மீடியா இமேஜை கிரியேட் செய்கிறீர்கள். மிகப்பெரிய தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர்.
அவருக்குப் பிறகு தமிழகத்தில் கட்சி ஆரம்பித்து நடத்துவது இயலாத காரியம். அதில் மிகப்பெரிய சிரமம் உள்ளது. தூத்துக்குடியில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் கூட ஒரு மாவட்ட செயலாளர் பதவியை வழங்கவில்லை என்று அந்த நபர் பல பிரச்சனைகளை செய்தார். எடப்பாடி பழனிச்சாமி ஓபிஎஸ்ஐ ஏற்றுக்கொள்வது அவர்களின் உட்கட்சி விவகாரம். அது உண்மையா அல்லது பொய்யா என்பது குறித்து நான் கருத்து சொல்ல முடியாது என தெரிவித்துள்ளார்.
