actor Rajinikanth

வண்டி போற ரூட்டுல நான் சிவனேன்னு போயிட்டே இருப்பேன் – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்ட வித்யாசமான புத்தாண்டு வாழ்த்து!

By Elango on தை 1, 2026

Spread the love

இன்று 2026ம் ஆண்டு புத்தாண்டு தினத்தில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது புத்தாண்டு வாழ்த்துகளை வலைதள பக்கங்களில் தெரிவித்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த், இன்று காலை போயஸ்கார்டன் வீட்டின் முன்பு திரண்டிருந்த ரசிகர்களுக்கு நேரில் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார்.

அதன்பிறகு ரஜினிகாந்த் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ராகவேந்திரர் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். அதைத் தொடர்ந்து நடிகர் கெளதம் ராம் கார்த்திக் நடித்துள்ள ரூட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

   

இதற்கிடையே நடிகர் ரஜினிகாந்த் தனது எக்ஸ் பக்கத்தில் ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை வித்யாசமாக கூறியிருக்கிறார். முத்து படத்தில் ரஜினியும் மீனாவுடன் குதிரை வண்டியில் செல்லும் ஒரு காட்சியை அதில் ரஜினி பதிவிட்டுள்ளார்.

   

அதில் மீனாவிடம் ரஜினிகாந்த், நான் போற ரூட்டை பத்தி எப்பவுமே கவலைப்பட்ட மாட்டேன். ஆண்டவன் மேல பாரத்தை போட்டுட்டு வண்டி எந்த ரூட்ல போகுதோ அதுல சிவனேன்னு சொல்லிட்டு போயிட்டே இருக்க வேண்டியதுதான் என்று பேசுகிற ஒரு காட்சியை அதில் ரஜினி பதிவிட்டுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வைரலாகி வருகிறது.