பாராளுமன்ற மக்களவையில் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் ‘நாரி சக்தி வந்தன் அபிநியம்’ மசோதாவிற்கு எதிராகச் சமாஜ்வாடி கட்சி வாக்களித்ததை அடுத்து, உத்தரப் பிரதேச அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அகிலேஷ் யாதவ் பெண்களுக்கு எதிரானவர் எனக் குற்றம்சாட்டிய பாஜகவினர், அவருக்கு எதிராகப் போராட்டங்களை நடத்தினர். அத்தகைய போராட்டத்தின் போது, பாஜக பெண் எம்.எல்.ஏ அனுபமா ஜெய்ஸ்வால், அகிலேஷ் யாதவின் உருவப்பொம்மையைத் தீயிட்டு கொளுத்த முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீதே தீப்பிடித்ததில் காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அரசியல் ரீதியாகக் கடும் மோதல்கள் நிலவிய போதிலும், மனிதாபிமான அடிப்படையில் அகிலேஷ் யாதவ் இன்று மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வரும் அனுபமா ஜெய்ஸ்வாலைச் சந்தித்து நலம் விசாரித்தார். தன்னை எதிர்த்துப் போராடி, தனது உருவப்பொம்மையை எரித்தபோது காயமடைந்த ஒரு சட்டமன்ற உறுப்பினரை நேரில் சென்று சந்தித்த அகிலேஷின் இந்தச் செயல், அரசியல் வட்டாரங்களில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சந்திப்பு குறித்துத் தனது ‘எக்ஸ்’ (X) தளத்தில் பதிவிட்டுள்ள அகிலேஷ் யாதவ், “மக்களிடையே மோதல்கள் உருவாவதை நாங்கள் ஒருபோதும் விரும்பவில்லை; சமூகத்தில் நல்லிணக்கம் நிலவ வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்,” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், தமது ஆக்கபூர்வமான அரசியல் தங்களுக்குக் கற்றுக்கொடுத்த ஆரோக்கியமான மரபின் அடிப்படையிலேயே இச்சந்திப்பு நிகழ்ந்ததாகக் கூறியுள்ள அவர், நல்லெண்ணமும் நல்லிணக்கமும் நிலைத்திருக்கட்டும் என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜைச் சேர்ந்த 41 வயது பெண் ஒருவர், தனது பெற்றோர் மற்றும் உடன்பிறந்தவர்களுக்கு எதிராகக் காவல் நிலையத்தில்…
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில், கார் மோதிய விபத்தில் பெண்ணொருவருக்குச் சிறு காயம் ஏற்பட்டதற்காக, தொழிலதிபர் ஒருவரை ஒரு கும்பல்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து, வரும் மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கைக்காக ஒட்டுமொத்த மாநிலமும் காத்திருக்கும் நிலையில்,…
திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளரும், அக்கட்சியின் ஊடகப் பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளருமான ஸ்ரீரங்கம் ரமேஷின்…
பெங்களூரு மாகடி சாலையில் உள்ள பிரசன்னா திரையரங்கில், மறைந்த பழம்பெரும் நடிகர் விஷ்ணுவர்தனுக்காக வைக்கப்பட்டிருந்த 100 அடி உயர கட்-அவுட்…
கோயம்புத்தூர் அரசியல் களம் தேர்தல் முடிந்த பின்னரும் தணியாத வெப்பத்துடன் தகித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, கோவை தெற்கு மற்றும் வடக்கு…