“விஜய்ய ஆள விடுங்க..6 மாசம் டைம்”… விஜய்யை முதலமைச்சராக்க பாஜக போடும் மாஸ்டர் பிளான்… அமித்ஷாவிற்கு அனுப்பப்படும் அந்த ரகசிய கடிதம்…!

Spread the love

தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் ஆட்சி அமைக்க அனைத்துக் கட்சிகளும் நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க வேண்டும் என்று பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் கோரிக்கை விடுத்துள்ளார். எந்தவித அரசியல் பின்னணியும் இன்றி மக்கள் சேவையில் இறங்கி வெற்றி பெற்றுள்ள விஜய்க்கு, ஒரு சிறந்த நிர்வாகியாகச் செயல்பட குறைந்தபட்சம் ஆறு மாத கால அவகாசத்தை அனைத்து அரசியல் கட்சிகளும் வழங்க வேண்டும் என்று அவர் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக மக்கள் தவெக-விற்கு 108 இடங்களை வழங்கி தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற வைத்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், ஜனநாயக மாண்பைக் காக்க குதிரை பேர அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றார். தமிழக தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம் இதுகுறித்து தேசியத் தலைவர்கள் பேச வேண்டும் என்றும், தவெக சுய விருப்பத்துடன் ஆட்சி அமைக்கத் தேவையான சூழலை உருவாக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா ஆகியோருக்குக் கடிதம் எழுத உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

திமுகவின் கடந்த ஐந்தாண்டு கால “திராவிட மாடல்” ஆட்சியை மக்கள் நிராகரித்துள்ளதாகக் குறிப்பிட்ட பிரசாத், கனிம வளக் கொள்ளை மற்றும் ஊழல்களைத் தடுத்து நிறுத்தினால் விஜய் அளித்த தேர்தல் வாக்குறுதிகள் சாத்தியமானவையே என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். குறிப்பாக, தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னெடுத்த போராட்டங்கள் திமுக ஆட்சிக்கு எதிரான மனநிலையை மக்களிடம் உருவாக்கியதாகவும், அந்த வாய்ப்பைத் தமிழக மக்கள் தற்போது விஜய்க்கு வழங்கியுள்ளதாகவும் அவர் பகுப்பாய்வு செய்துள்ளார்.

பிரிவினைவாத சக்திகள் மற்றும் சுயநலக் கட்சிகளின் அழுத்தங்களுக்கு இடம் கொடுக்காமல், தமிழகத்தின் வளர்ச்சியை முன்னிறுத்தி விஜய் செயல்பட இதுவே சரியான தருணம் என்று அவர் கூறியுள்ளார். ஆறு மாத காலத்திற்குப் பிறகு தவெக அரசின் செயல்பாடுகளைப் பொறுத்து, மற்ற கட்சிகள் தங்கள் கொள்கைகளுக்கு ஏற்ப முடிவெடுக்கலாம் என்றும், அதுவரை தமிழகத்தில் ஒரு நாகரிகமான அரசியலை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றும் ஏ.என்.எஸ். பிரசாத் தனது அறிக்கையின் வாயிலாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.

Nanthini

Recent Posts

“விஜய்யை வாழ்த்தினால் தப்பா..?” இதுதான் உண்மையான தலைமை… சாதி, மதம் இல்லாத அரசியலே எனது விருப்பம்… தவெக-வுக்கு ஆதரவாக அஸ்வின் வீசிய அனல் பறக்கும் கருத்துகள்..!!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு வாழ்த்துத் தெரிவித்ததற்காக எழுந்த விமர்சனங்களுக்குப் பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வின் தற்போது பதிலளித்துள்ளார்.…

2 minutes ago

“கேப்டன்னா இப்படி இருக்கணும்” சதம் அடிக்காதது ஏன்? மனம்திறந்து பேசிய சஞ்சு: கிரிக்கெட் உலகமே பாராட்டும் அந்தப் பண்பு..!!

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடினாலும், துரதிர்ஷ்டவசமாக சதம் அடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டார்.…

3 minutes ago

“திடீரென குறுக்கே வந்த மாடுகள்… கட்டுக்கடங்காத கார்”… ஆர்.பி. சௌத்ரியின் கடைசி நிமிடங்கள்…. அதிர்ச்சியில் திரையுலகம்…!

தென்னிந்தியத் திரையுலகில் நூற்றுக்கணக்கான கலைஞர்களுக்கு வாழ்வளித்த 'வெற்றித் தயாரிப்பாளர்' ஆர்.பி. சௌத்ரி (76), மே 5 அன்று ராஜஸ்தான் மாநிலத்தில்…

5 minutes ago

அடுத்த ஷாக்.! “EPS-ஐ நம்பி பாதாளத்திற்குப் போகாதீங்க” விஜய் கிட்ட வந்துருங்க.. அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு புகழேந்தி விடுத்த அதிரடி எச்சரிக்கை..!!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில், காரல் மார்க்ஸ் பிறந்தநாளில் மரியாதை செலுத்திய புரட்சி அதிமுகவின் புகழேந்தி, எடப்பாடி…

7 minutes ago

“ஆதரவு தர முடியாது”… ஓ.எஸ். மணியன் கொடுத்த ‘ஷாக்’ ட்ரீட்… கடைசி நேரத்தில் விஜயை கைவிட்ட எடப்பாடி… தமிழக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, அரசியல் களம் அனல் பறந்து கொண்டிருக்கும் வேளையில், அதிமுகவின் மூத்த தலைவர் ஓ.எஸ்.…

10 minutes ago

“விஜய்யை CM ஆக்குவது ரொம்ப ஈசி” அன்றே கணித்த புஸ்ஸி ஆனந்த்… சொன்னது நடந்துருச்சேப்பா… சோஷியல் மீடியாவை அதிர வைக்கும் தவெக பொதுச்செயலாளரின் பழைய வீடியோ..!!

2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் 100-க்கும் மேற்பட்ட இடங்களை வென்று தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில்,…

12 minutes ago