2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் 100-க்கும் மேற்பட்ட இடங்களை வென்று தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன்னதாகப் பேசிய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. “விஜய் அண்ணனை ஒரு இடத்துக்குப் பத்திரமாக கூட்டிட்டு வர்றதுதான் கஷ்டமான வேலை, ஆனா அவரைத் தமிழ்நாட்டோட முதலமைச்சர் ஆக்குறது ரொம்ப ஈசி” என்று அவர் அன்று சொன்ன வார்த்தைகள் இன்று அப்படியே உண்மையாகியுள்ளது.
இதனைத் தேடிப் பிடித்த இணையவாசிகள், “அன்றே சொன்னார் புஸ்ஸி ஆனந்த்” என்று பதிவிட்டு சோஷியல் மீடியாவை அதிர வைத்து வருகின்றனர். தற்போது தவெக சட்டமன்றக் குழுத் தலைவராக விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், புஸ்ஸி ஆனந்தின் அந்தப் பழைய பேட்டி லட்சக்கணக்கான லைக்குகளைக் குவித்து வைரலாகி வருகிறது. புஸ்ஸி ஆனந்தின் தீர்க்கதரிசனமான இந்தப் பேச்சு, அக்கட்சியின் தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தவெக ஒரு தனிப்பெரும் சக்தியாக உருவெடுத்திருப்பதுடன், ஆட்சி அமைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் முன்னெடுத்து வரும் நிலையில், புஸ்ஸி ஆனந்தின் இந்த வைரல் வீடியோ ஒரு வெற்றிப் பிரகடனமாகவே பார்க்கப்படுகிறது. தனது தலைவன் மீது அவர் வைத்திருந்த அசைக்க முடியாத நம்பிக்கையும், மக்களின் பேராதரவும் இணைந்து இன்று விஜய்யை கோட்டைக்கு அழைத்துச் செல்லும் நிலையை உருவாக்கியுள்ளதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘தாய்மாமன் தங்க மோதிரம்…
அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்த நான்கு முன்னாள் எம்.எல்.ஏ-க்களுக்கு, வரவிருக்கும் இடைத்தேர்தலில் போட்டியிட சீட் வழங்க…
கர்நாடகா மாநிலம் மைசூரு அருகே திருமணக் கொண்டாட்டத்தில் இருந்த குடும்பமே ஒட்டுமொத்தமாகத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும்…
அயோத்தி ராமர் கோயிலுக்குக் கொடையாக வழங்கப்பட்ட 200 கிலோ வெள்ளிப் பொருட்களுக்கு இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வப் ரசீதோ அல்லது அங்கீகாரமோ…
மத்தியப் பிரதேச மாநிலம் காண்ட்வாவில், ஒரு வயதுக் குழந்தை எல்.இ.டி விளக்கு பொருத்தப்பட்ட ராக்கியுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு பயங்கரமான…
உத்தரப் பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் மாவட்டத்தில், 70 வயது முதியவர் ஒருவருக்கு நேர்ந்த கொடூரமான மற்றும் அத்துமீறிய அநீதி பெரும்…