இன்று செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் விஜய் முன்னிலையில் இணைந்துள்ளார். இந்நிலையில் செங்கோட்டையனை தொடர்ந்து சேலம் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏவும், பாஜக நிர்வாகியுமான வெங்கடாஜலம் தவெகவில் இணைந்துள்ளார். அதிமுகவில் எம்எல்ஏ, மாவட்ட செயலாளராக இருந்த இவர், 2023-ல் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
தற்போது அங்கிருந்து விலகி தவெக கட்சிக்கு தாவியுள்ளார். செங்கோட்டையன் கட்சியில் இணையும் நிகழ்ச்சியில்தான் இவரும் இணைந்தார். எனவே, இவரையும் செங்கோட்டையன் தான் தவெகவுக்கு அழைத்து சென்றாரா? என கேள்வி எழுந்துள்ளது
