“வானதி, தமிழிசைக்கு அடித்த லக்கி பிரைஸ்”… அண்ணாமலைக்கு மட்டும் ஏன் இந்த நிலை?… எடப்பாடியின் ‘மாஸ்டர் பிளான்’…!

Spread the love

தமிழக அரசியலில் “என் மண், என் மக்கள்” பயணத்தின் மூலம் தாமரையைப் பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்த்த அண்ணாமலையின் பெயர், சமீபத்தில் வெளியான பாஜக வேட்பாளர் பட்டியலில் இடம்பெறாதது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தமிழக பாஜகவின் முகமாகப் பார்க்கப்படும் ஒருவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது தற்செயலானதல்ல, மாறாக இது திட்டமிட்ட ‘சைடுலைனிங்’ என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். தனக்கு இடமில்லை என்றதும் “நான் பூத் ஏஜென்டாகப் பணியாற்றுவேன்” என்று அவர் கூறுவது, தொண்டர்களின் அனுதாபத்தைப் பெறுவதற்கான ஒரு தற்காப்பு உத்தியாகவே அரசியல் விமர்சகர்களால் பார்க்கப்படுகிறது.

இந்தப் பட்டியலை உற்று நோக்கினால், அண்ணாமலையின் தீவிரமான அரசியலை விட, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ‘குட் புக்’கில் இருப்பவர்களுக்கே இந்த முறை அதிக வாய்ப்புகள் வழங்கப்பட்டிருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது. குறிப்பாக, கடந்த சில மாதங்களாக அதிமுகவுடன் இணக்கமான போக்கைக் கடைபிடித்து வந்த வானதி சீனிவாசனுக்கு அவர் கேட்ட கோவை வடக்குத் தொகுதியும், எல். முருகனுக்கு அவிநாசி தொகுதியும் உறுதி செய்யப்பட்டுள்ளன. தமிழிசை சவுந்தரராஜன் ஆளுநர் பதவியைத் துறந்துவிட்டு வந்து மயிலாப்பூர் தொகுதியைக் கைப்பற்றியுள்ள நிலையில், சீனியர் முகங்களுக்கே டெல்லி தலைமை முன்னுரிமை அளித்துள்ளது.

அதிமுக உடனான கூட்டணிப் பேச்சுவார்த்தைகளின் போது, அண்ணாமலையின் ‘அக்ரசிவ்’ அணுகுமுறை முட்டுக்கட்டையாக இருந்ததாக ஒரு தரப்பு குற்றம் சாட்டியது. “அண்ணாமலை இருந்தால் கூட்டணிக்கு ஒத்து வராது” என எடப்பாடி பழனிசாமி தரப்பில் வைக்கப்பட்ட நிபந்தனையே, அவரை வேட்பாளர் பட்டியலிலிருந்து ஓரங்கட்டக் காரணமாக இருந்ததாகக் கிசுகிசுக்கப்படுகிறது. தமிழகத்தில் ஒரு மாற்று சக்தியாக பாஜகவை வளர்த்தெடுக்க அண்ணாமலை எடுத்த கடும் முயற்சிகள், தற்போது கூட்டணிக் கணக்குகளுக்காகப் பலிகடா ஆக்கப்பட்டிருக்கிறதா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் பலரும் அதிமுகவுடன் சுமுகமான உறவைப் பேணக்கூடியவர்கள் என்பதால், இது ஒரு ‘எடப்பாடி-ஃப்ரெண்ட்லி’ பட்டியலாகவே பார்க்கப்படுகிறது. இந்த அதிரடி மாற்றங்கள் கமலாலயத்தின் செல்வாக்கை உயர்த்தப்போகிறதா அல்லது அண்ணாமலை எனும் பிம்பத்தைச் சிதைக்கப்போகிறதா என்பது மே 4-ம் தேதி தேர்தல் முடிவுகளின் போது தெளிவாகத் தெரியும். இன்று மாலை கோவை வடக்கில் வானதி சீனிவாசனை ஆதரித்துப் பிரச்சாரத்தைத் தொடங்கும் அண்ணாமலை, களத்தில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துவார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Nanthini

Recent Posts

மெட்ரோ பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு..! இனி இந்த கார்டு இருந்தா தான்… மெட்ரோ நிர்வாகத்தின் அதிரடி அறிவிப்பு..!

சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதன்படி,…

7 minutes ago

CSK ரசிகர்களுக்குப் பேரதிர்ச்சி.. ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய நட்சத்திர வீரர்.. ஏமாற்றத்தில் சென்னை டீம்..!!

ஐபிஎல் 2026 சீசன் தொடங்க உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சியளிக்கும் விதமாக, இளம் நட்சத்திர…

9 minutes ago

“என் கண்ணே போயிடுச்சு” 1 கோடி ரூபாய்க்கு பிளாட் வாங்கி.. வீடு முழுக்க இருக்கும் புறவால் வந்த வினை… கோடிக்கணக்கில் முதலீடு செய்தவரின் கண்ணீர் வீடியோ..!!

நோய்டாவைச் சேர்ந்த ஆதர்ஷ் என்ற இளைஞர், சுமார் ஒரு கோடி ரூபாய் செலவழித்து வாங்கிய தனது சொகுசு ஃபிளாட்டின் (Flat)…

12 minutes ago

ரூ.600 கோடி சொத்துகளை மறைத்துள்ளார்… ரூ.180 கோடி வரி கட்டல.. சுந்தர்.சி மீது பரபரப்பு குற்றசாட்டு..!!

மதுரை மத்திய தொகுதி NDA (தேசிய ஜனநாயகக் கூட்டணி) வேட்பாளரான இயக்குநர் சுந்தர் சி மீது, வழக்கறிஞர் வாஞ்சிநாதன் சுமார்…

26 minutes ago

பெரும் பரபரப்பு.! “மாம்பழத்தில் விஷம்” பாமக ராமதாஸ் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை..!!

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான டாக்டர் ராமதாஸ், தேர்தல் நெருங்கும் வேளையில் "மாம்பழத்தில் விஷம்" எனும் தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கை…

32 minutes ago

BREAKING: தவெகவினர் என் மீது செருப்பை வீசினர்… திவ்யா சத்யராஜ் பரபரப்பு புகார்..!!

திமுக மாநிலத் துணைச் செயலாளரான திவ்யா சத்யராஜ், தேர்தல் பிரச்சாரத்தின் போது தவெக தொண்டர்கள் தன் மீது செருப்பு வீசியதாகக்…

36 minutes ago