முன்னணி நடிகரான விஷால் நடிப்பில் ரிலீசாகும் படங்கள் சமீப காலமாக எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு மார்க் ஆண்டனி திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது 12 ஆண்டுகளுக்கு பிறகு விஷால் நடிப்பில் ரிலீசான மதகஜராஜா படமும் சூப்பர் ஹிட் ஆனது. நடிகர் சங்க கட்டட இறுதிப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேலையில் விஷால் தனது திருமண அறிவிப்பை வெளியிட்டார்.
அவர் நடிகை தான் சாய் தன்ஷிகாவை திருமணம் செய்து கொள்வதாக அறிவித்த நிலையில் இருவருக்கும் நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்தது. தற்போது ஆர்.பி சவுத்ரி சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் மகுடம் திரைப்படத்தில் விஷால் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த திரைப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
மூத்த பத்திரிக்கையாளரும், சினிமா விமர்சாகருமான வலைப்பேச்சு பிஸ்மி சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது, விஷால் மகுடம் திரைப்படத்தில் சின்சியராக நடித்துக் கொண்டிருக்கிறார். காலை 6 மணிக்கே மேக்கப்புடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். நம்ம விஷாலா இப்படி சின்சியரா இருக்கிறார் என்று ஆச்சரியமாக பார்க்கும் அளவிற்கு உள்ளது. இது எல்லாமே தன்ஷிகா வந்த நேரம் தான். விஷால் இப்படி சின்சியராக இருக்கிறார் என்று கூறினால் யாருமே நம்ப மாட்டாங்க என கூறியுள்ளார்.
