பிரபல இயக்குனரான ஆர்.கே செல்வமணி இயக்கத்தில் விஜயகாந்த் புலன் விசாரணை என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த படம் 1990 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. இதனையடுத்து 1991 ஆம் ஆண்டு விஜயகாந்த் வைத்து கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தை ஆர்.கே செல்வமணி இயக்கினார். இது விஜயகாந்தின் நூறாவது திரைப்படம். இந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. சமீபத்தில் விஜயகாந்த் மற்றும் ராவுத்தர் இடையேயான நட்பு குறித்து ஆர்.கே செல்வமணி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது, கேப்டன் பிரபாகரன் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஏகப்பட்ட பிரச்சனை வரும். அதை எல்லாவற்றையும் விஜயகாந்த் சார் பார்த்துக் கொள்வார். சில இடங்களில் ஷூட்டிங் நடத்த முடியாது. அப்போது இப்ராஹிம் சார் ஷூட்டிங்கை நிறுத்தி விடுவார். ஆனால் விஜயகாந்த் சார் அவரை சமாதானப்படுத்தி ஷூட்டிங் நடத்த உதவி செய்வார்.
இரண்டு பேருக்கும் பயங்கரமான சண்டை வரும். இருந்தாலும் நான் பல ஆயிரம் பேரை பார்த்துள்ளேன். ஆனால் விஜயகாந்த் ராவுத்தர் நட்பு மாதிரி நான் பார்த்ததே கிடையாது. கணவன் மனைவியை விட அந்த நட்பு புனிதமானது. அதே நேரம் ஸ்கூல் பசங்களை விட குழந்தை தனமானது. உலகத்தில் இருக்கிற மிகச்சிறந்த நட்புகளில் விஜயகாந்த் ராவுத்தர் நட்பும் ஒன்று என ஆர்.கே செல்வமணி கூறியுள்ளார்.
