மக்களவையில் பிறப்பு மற்றும் இறப்பு பதிவு திருத்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி, பிறப்பு மற்றும் இறப்பு விவரங்களை உடனடியாகப் பதிவு செய்யத் தவறி, ஒரு ஆண்டுக்கு மேல் ஆனால் இரண்டு ஆண்டுகளுக்குள்ளாகப் பதிவு செய்ய முற்பட்டால், மாவட்ட ஆட்சியர் அல்லது துணை ஆட்சியரின் முறையான ஒப்புதலைப் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது; அதுவே இரண்டு ஆண்டுகளைக் கடந்துவிட்டால், சம்பந்தப்பட்ட பிறப்பு அல்லது இறப்பைப் பதிவு செய்ய முதல்நிலை நீதித்துறை நடுவரின் (Magistrate) நீதிமன்ற உத்தரவைப் பெறுவது அவசியமாக்கப்பட்டு நடைமுறைகள் முறைப்படுத்தப்பட்டுள்ளன.
