இப்படி சொல்லிட்டாங்களே…! “என்னை கல்யாணம் பண்ணிக்க அவ்ளோ பேர் கேட்கிறாங்க…” 2 முறை கைகூடாத காதல்… ஆனா இப்போ…! ஓப்பனாக பேசிய நடிகை சோனா…!!

By Devi Ramu on ஆடி 31, 2026

Spread the love

தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகை சோனா, சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தனது சொந்தக் வாழ்க்கை மற்றும் காதல் அனுபவங்கள் குறித்து மிகவும் வெளிப்படையாகப் பேசியுள்ளார். அதில் பேசிய அவர், வாரத்திற்குப் குறைந்தபட்சம் 5 பேராவது தன்னை திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்துக் கேட்பதாகத் தெரிவித்துள்ளார். சிறு வயதிலேயே காதலித்தால் வீட்டில் பலத்த அடி கிடைக்கும் என்பதால், இளமைக் காலத்தில் அதுபோன்ற எண்ணங்கள் ஏதும் தனக்கு வந்ததில்லை என்றும் அவர் அந்தப் பேட்டியில் வேடிக்கையாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தனது வாழ்நாளில் இதுவரை இரண்டு முறை உண்மையாகக் காதலில் விழுந்ததாகவும், ஆனால் பல்வேறு காரணங்களால் அந்த இரண்டு காதல்களுமே திருமணம் எனும் நிலையை எட்டவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். கடந்தகாலக் கசப்பான அனுபவங்களுக்குப் பிறகு, தற்போது எந்தவிதப் பந்தமும் இன்றித் தனியாக சிங்கிளாக மிகவும் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் வாழ்ந்து வருவதாக நடிகை சோனா அந்த நேர்காணலில் மனந்திறந்து கூறியுள்ளார்.