இந்தியாவைப் பொறுத்தவரையில் தினம் தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். ஏனென்றால் மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடும்போது ரயிலில் குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும் என்பதால் பலரும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். அதனால் பயணிகளின் வசதிக்கு ஏற்றவாறு இந்திய ரயில்வே சார்பில் ஏராளமான சலுகைகளும் புதுப்புது அறிவிப்புகளும் அவ்வப்போது வெளியாகி கொண்டிருக்கிறது.
இப்படியான நிலையில் இனி ரயில் புறப்படுவதற்கு நான்கு மணி நேரத்திற்கு பதிலாக எட்டு மணி நேரத்திற்கு முன்பே முன்பதிவு செய்த பயணிகளின் இறுதி பட்டியல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியை தற்போது ரயில்வே வாரியம் உறுதிப்படுத்தியுள்ளது. இதனால் காத்திருப்போர் பட்டியல் பயணிகள் முன்கூட்டியே மாற்று ஏற்பாடுகளை செய்ய முடியும். நிமிடத்திற்கு 1.5 லட்சம் டிக்கெட்டுகளை உருவாக்கும் புதிய முன்பதிவு முறையும் விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
