இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாக்கி விட்டது. அதனால் ஆதார் கார்டில் உள்ள விவரங்கள் அனைத்தையும் எப்போதும் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும் என்று அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அதே சமயம் ஆதார் கார்டை முக்கிய ஆவணங்களுடன் இணைக்க வேண்டும் என்றும் மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றது.
அதன்படி ரேஷன் கார்டு ஆதார் சரிபார்ப்புக்கு மத்திய அரசு விதித்த காலக்கெடு ஜூன் 30 இன்றுடன் நிறைவடைய உள்ளது. இதை செய்யாதவர்களுக்கு ரேஷன் கார்டு ரத்தாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. நாடு முழுவதும் அந்தியோதயா திட்டத்தின் கீழ் ரேஷன் அரிசி பெறுபவர்களின் தகவல்களை மத்திய அரசு உறுதிப்படுத்த உத்தரவிட்டுள்ளது. உயிரிழந்தவர்கள், வேறு நாடு மற்றும் ஊர்களில் வசிப்பவர்களுக்கும் சேர்த்து அரிசி அனுப்பி வைக்கப்படுவதால் ரேஷன் கார்டு ஆதார் சரிபார்ப்பு செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.
