55 வயது மாமாவுக்கு ஆசைப்பட்டு 25 வயது கணவரை கொன்ற இளம் பெண்.. திருமணமான 45 நாட்களில் நடந்த கொடூர சம்பவம்..!

By Nanthini on ஆடி 4, 2025

Spread the love

பீகார் மாநிலம் அவுரங்காபாத்தில் 20 வயதான இளம் பெண் ஒருவர் திருமணமான 45 நாட்களில் கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், புதிதாக திருமணமான குஞ்சாதேவி தன்னுடன் தகாத உறவில் இருந்து 55 வயதான தன்னுடைய சொந்த மாமாவான ஜீவன் சிங்குடன் சேர்ந்து தனது கணவனான பிரியான் சுவை (25) கொள்ள கூலிப்படையை பயன்படுத்தியுள்ளார். திருமணத்திற்கு முன்பே ஜீவன் சிங் மற்றும் குஞ்ஜா தேவி இருவரும் தகாத உறவில் இருந்ததோடு திருமணம் செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.

ஆனால் பெண்ணின் பெற்றோர் அதனை விரும்பாமல் பெண்ணை கட்டாயப்படுத்தி பிரியான்சுவுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து தனது கணவனை கொன்று விட்டு மீண்டும் தனது மாமாவுடன் சேர்ந்து குஞ்ஜா தேவி முடிவு செய்துள்ளார். இதனிடையே தனது தங்கை வீட்டிற்கு கடந்த 25ஆம் தேதி சென்று விட்டு ரயிலில் பயணித்து வீடு திரும்பி கொண்டிருந்த பிரியான்சு, நவீன நகர் ரயில் நிலையத்தை வந்தடைந்த போது மனைவியை தொடர்பு கொண்டு தன்னை வீட்டிற்கு அழைத்து வர பைக்கில் யாரையாவது அனுப்பும்படி கேட்டுள்ளார். அந்த சமயத்தில் திடீரென்று இரண்டு பேர் வழிமறித்து அவரை துப்பாக்கியால் சுட்டனர்.

   

இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பிறகு போலீசாருக்கு இந்த விஷயம் தெரிய வந்ததும் குஞ்சாதேவி கிராமத்தை விட்டு தப்பி சென்று விட்டார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் பெண்ணின் தொலைபேசி தகவல்களை எடுத்து ஆய்வு செய்தபோது குஞ்சாதேவி தனது மாமா ஜீவன் சிங்குடன் அடிக்கடி தொலைபேசியில் உரையாடியது தெரியவந்துள்ளது. அதன் பிறகு தீர விசாரித்ததில் கொலையாளிகளை போலீசார் கண்டுபிடித்தனர். இதனைத் தொடர்ந்து குஞ்சாதேவி உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தலைமுறைவாகியுள்ள ஜீவன் சிங்கை போலீசார் தேதி வருகிறார்கள். 55 வயது மாமாவுக்கு ஆசைப்பட்டு 25 வயது கணவரை கொன்ற இளம் பெண்ணின் இந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.