கேவலம் 6 சமோசாவுக்காக 14 வயது சிறுமியின் வாழ்க்கையை சீரழித்த உ.பி போலீசார்.. நாட்டையே உலுக்கும் அதிர்ச்சி சம்பவம்..!

By Nanthini on ஆடி 4, 2025

Spread the love

உத்திரபிரதேசம் மாநிலத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபரிடம் சமோசாவை லஞ்சமாக வாங்கிக்கொண்டு போலீசார் அவருக்கு ஆதரவாக கட்டப்பஞ்சாயத்து பேசிய சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலத்தின் ஈட்டா மாவட்டத்திலுள்ள ஜலேசர் பகுதியில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு 14 வயது சிறுமி அந்த பகுதியில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தபோது சமோசா கடை வைத்திருந்த வீரேஷ் என்ற நபர் சிறுமியை பின்தொடர்ந்து அவரை வாயை மூடி தூக்கிச் சென்று கோதுமை வயலில் வைத்து வன்கொடுமை செய்துள்ளார். இதை வெளியே சொன்னால் கொன்று விடுவேன் என்று அவர் மிரட்டிய நிலையில் சிறுமி தனது தந்தையிடம் இதை கூறியுள்ளார்.

அதன் பேரில் வீரேஷ் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் அவர்கள் வழக்குப்பதிவு செய்ய மறுத்ததுடன் சிறுமியின் தந்தையை ஜாதியை சொல்லி திட்டி உள்ளனர். இறுதியாக கடந்த ஆண்டு டிசம்பரில் வழக்கு பதிவு செய்யப்பட்டபோது போக்சோ வழக்காக பதியப்படாமல் இறுதி ரிப்போர்ட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதை எதிர்த்து சிறுமியின் தந்தை கடந்த ஜூன் 27ஆம் தேதி காவல் துறை விசாரணையின் மீது சந்தேகம் தெரிவித்து புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது சிறுமியின் தந்தை சொன்ன தகவல்கள் அதிர்ச்சி அடைய வைத்தது.

   

சமோசா கடை வைத்துள்ள விரேஷிடம் தனது மகள் சமோசா கேட்டதாகவும் அதை அவர் தராததால் அவரைப் பற்றி போலி குற்றச்சாட்டை வைத்துள்ளதாகவும் போலீசார் ரிப்போர்ட் தயாரித்துள்ளனர். ஆனால் நேர்மாறாக இந்த வழக்கில் போலீசார் வீரேஷிடம் ஆறு சமோசாக்களை லஞ்சமாக பெற்றுக்கொண்டு எங்களுக்கு எதிராக இந்த ரிப்போர்ட்டை எழுதினார்கள் என்று சிறுமியின் தந்தை அதிர்ச்சி குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இதனை தொடர்ந்து இந்த வழக்கை மீண்டும் முதலில் இருந்து விசாரிக்க நீதிமன்ற உத்தரவிட்டு உள்ள நிலையில் இந்த சம்பவம் உத்திர பிரதேசத்தில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது