பீகார் மாநிலம் கயாவை சேர்ந்த 74 வயதான முன்னாள் விமானப்படை வீரரான மோகன்லால் என்பவர் தான் இறந்தது போல நடித்து தனக்குத்தானே இறுதி சடங்கு நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மோகன்தாளின் மனைவி 14 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இப்படியான நிலையில் தான் உயிரிழந்தால் இந்த ஊரில் யாரெல்லாம் தன்னுடைய இறுதி சடங்குக்கு வருவார்கள், யாரெல்லாம் என் மீது அன்பு வைத்துள்ளார்கள் என்று தெரிந்து கொள்வதற்கு மோகன்லால் மிகவும் ஆசைப்பட்டுள்ளார்.
இந்த ஆசையே நிறைவேற்றுவதற்காக தான் இறந்தது போல நடித்து மோகன்லால் தனக்கு இறுதி சடங்கு நடத்தினார். இறுதி சடங்கு நடந்து கொண்டிருந்தபோது திடீரென எழுந்து அமர்ந்து அங்கிருந்து அனைவரையும் அவர் ஆச்சரியப்படுத்தினார். இந்த சம்பவம் தற்போது இணையத்தில் வெளியாகி பேசும் பொருளாகியுள்ளது.
