அடுத்த ஷாக்… கரூர் நெரிசல் திட்டமிடப்பட்ட சதி… இபிஎஸ் பரபரப்பு பேச்சு…!

By Nanthini on ஐப்பசி 15, 2025

Spread the love

தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக திமுக அமைச்சர்கள் பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்க கோரி வெளிநடப்பு செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கரூரில் விஜய் பேச ஆரம்பித்த பத்து நிமிடத்தில் செருப்பு வீசப்பட்டதாகவும், அதுவே கரூர் நெரிசலுக்கு காரணம் என்றும் EPS விமர்சித்துள்ளார்.

25 மருத்துவர்கள் வந்தாலும் உடற் கூர் ஆய்வு செய்ய கரூர் மருத்துவமனையில் மேசை எங்கே உள்ளது என்று கேள்வி எழுப்பிய இபிஎஸ், ஒரு நபர் ஆணையம் உண்மையை மறைக்கும் முயற்சி என்றும் விமர்சித்தார். அதுமட்டுமல்லாமல் கரூர் நெரிசல் திட்டமிடப்பட்ட செயல் என்ற சந்தேகம் எழுவதாகவும் ஆகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.