தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக திமுக அமைச்சர்கள் பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்க கோரி வெளிநடப்பு செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பிரதான எதிர்க்கட்சி என்ற முறையில் கரூர் சம்பவம் குறித்து விவாதிக்க வலியுறுத்தினோம். கரூர் விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் கேள்விகளை எழுப்பிய பிறகு தான் முதலமைச்சரை பேச சபாநாயகர் அனுமதிக்க வேண்டும். எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பிய பிறகு தான் முதலமைச்சர்.
அதற்கு பதில் கூற வேண்டும். ஆனால் அதற்கு முன்னதாகவே விளக்கம் அளித்தது ஏன்? பூஜ்ஜிய நேரத்தில் முதலில் எதிர்க்கட்சித் தலைவருக்கு பேச வாய்ப்பு தராமல் முதலமைச்சரை பேச அனுமதி வழங்கியது ஏன்? முதலமைச்சர் கூறிய கருத்துக்கள் அனைத்தையும் அமைதியாக கேட்டுக் கொண்டுதான் இருந்தோம். கரூர் விவகாரத்தில் முழுமையான பாதுகாப்பு கொடுத்திருந்தால் 41 பேரின் உயிர் பறிபோய் இருக்காது. போதிய பாதுகாப்பு தராமல் அரசு அலட்சியமாக இருந்ததால் 41 பேர் உயிரிழந்துள்ளனர் என்று இபிஎஸ் தெரிவித்துள்ளார்.
