பிக் பாஸ் வீடு இப்படி தான் இருக்கும்.. இதனால் தான் நானும் Red Card தூக்குனன்.. பல உண்மைகளை உடைத்த விஷ்ணு..
பிக் பாஸ் வீடு இப்படி தான் இருக்கும்.. இதனால் தான் நானும் Red Card தூக்குனன்.. பல உண்மைகளை உடைத்த விஷ்ணு..
By Mahalakshmi on தை 23, 2024
Spread the love
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 7 முடிந்து பைனல் லிஸ்ட்கள் அனைவரும் வரிசையாக பேட்டி கொடுத்து வரும் நிலையில், இந்த வரிசையில் விஷ்ணுவின் பங்காகி இருக்கிறது. வரிசையாக பேட்டி கொடுத்து இருக்கும் அவர் பிரதீப் குறித்து நிறைய பாசிட்டிவ் தகவல்களையே சொல்லி இருக்கிறார். அந்த பேட்டியில் , பெண்கள் பாதுகாப்பு இல்லை என்பதை பிரதீப் விஷயத்தில் நான் ஒப்புக்கொள்ளவே மாட்டேன்.
எதுவும் சண்டை நடப்பதாக அவர்கள் நினைத்தால் கூட உடனே உள்ளே வந்துவிடுவார்கள். அத்தனை கதவு அங்கு இருந்தது; பாதுகாப்பு குறைவாக எதுவும் நடக்கவில்லை. எனக்கும் பெண்கள் சொன்னது அந்த இடத்தில் தான் எனக்கும் தெரிந்தது. நான் கூல் சுரேஷ் பிரச்சனைக்கு மட்டுமே உரிமைக்குரல் தூக்கினேன். மற்றவர்கள் சொன்னதும் விஷயம் வேறு மாதிரி மாறியது என்றும் கூல் சுரேஷ் விஷயம் மட்டுப்பட்டு விட்டது. அந்த வீட்டில் எல்லாமே நமக்கு தெரியாது.
நாம் பார்க்குறதும், பேசுவது மட்டுமே தெரியும்; நான் அப்போது நமக்கு தெரியாம எதுவும் நடந்து இருக்குமோ என நினைத்து தான் ரெட் கார்ட் கொடுத்தேன். வெளியில் வந்த பின்னரே நிறைய விஷயங்களை யூஸ் செய்தனர் என்பதை தெரிந்து கொண்டேன் என்றும் பிரதீப் நல்ல போட்டியாளர் தான்.
அவருக்கு என்ன தோணுதோ அதை பேசிவிடுவார் சிலருக்கு அது செட்டாகாமல் போய் இருக்கலாம் அதுவே, எனக்கும் அவருக்கும் கூட சண்டை நிறைய நடந்து இருக்கிறது. அங்கு ரெண்டு கார்ட் இருக்கும் என நினைத்தேன், ஆனால் ரெட் கார்டு ஒன்று தான் இருந்தது. இதை பிக் பாஸ் டீம் பார்த்து கொண்டுதான் இருப்பார்கள்; கமல் சாரும் பார்த்துட்டு வந்து இருப்பாரே? அதனால் தான் ஒரு கார்ட் வைத்து இருந்து இருக்கிறார்கள் என நினைத்து அந்த கார்ட் கொடுத்தேன்.
மஞ்சள் கார்ட் இருந்து இருந்தால் சத்தியமாக அதை தான் கொடுத்து இருப்பேன் என்று பேட்டியில் விஷ்ணு தெரிவித்தார். அவர் கொஞ்சம் அசந்த கேப்பில் சரியாக பிடிச்சு காலி செய்து விட்டனர்கள் என்று மனவருத்தத்துடன் தெரிவித்துள்ளார். பெண்கள் சொன்னதை என்றைக்குமே நான் சரி என நினைத்ததே இல்லை எனவும் பேட்டியில் விஷ்ணு குறிப்பிட்டு இருந்தார்.