தயாரிப்பாளருடன் ஏற்பட்ட மோதல்.. சிவகார்த்திகேயன் இல்லாமல் உருவாகும் ‘அயலான் 2’.. வெளியான ஷாக்கிங் தகவல்..

By Sumathi

Updated on:

கேஜேஆர் ஸ்டுடியோ தயாரிப்பாளர் கேஜேஆர் ராஜேஷ் தயாரிப்பில், கடந்த 12ம் தேதி அயலான் படம் வெளியானது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் பிரீத் சிங், சரத் கேல்கர், இஷா கோபிகர் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இதில் ஏலியன் பொம்மை முக்கிய கேரக்டரில் நடித்துள்ளது. கடந்த 6 ஆண்டுகளாக எடுக்கப்பட்ட படம், பல தடைகளை கடந்து திரைக்கு வந்தது.

இதில், கடைசி நேரத்தில் தர வேண்டிய கடன்தொகை ரூ. 27 கோடியை கொடுத்து படத்தை ரிலீஸ் செய்தார் சிவகார்த்திகேயன். அவர் ஏற்கனவே வாங்கிய கடன் என்பது குறிப்பிடத்தக்கது. இதை படத்தின் தயாரிப்பாளர் கேஜேஆர் ராஜேஷ் தருவதாக கூறிய நிலையில், கடைசியில் தரவில்லை. இதனால் இருவருக்கும் இடையே பலத்த சங்கடம் ஏற்பட்டுள்ளது.

   

இந்த சூழலில் வெளிவந்த இந்த படம் எதிர்பார்த்த அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. குறிப்பாக ஏலியன் பொம்மை, ரசிகர்களிடம் பெரிய அளவில் ரீச் ஆகும் என எதிர்பார்த்த படக்குழுவினருக்கு பலத்த ஏமாற்றமே மிஞ்சியது. ஏனெனில் ஏலியனுக்கும், ரசிகர்களுக்கும் இடையே ஒரு இணக்கம் ஏற்படும் வகையில் திரைக்கதையில் உணர்வுரீதியான தொடர்பு இல்லாததே இதற்கு காரணம். இதனால் படம் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களால் கொண்டாடப்படவில்லை.

இந்நிலையில், அயலான் படத்தின் 2ம் பாகத்தை வெளியிட, படத்தின் தயாரிப்பாளர் ராஜேஷ் முடிவு செய்துள்ளார்.ஏனெனில் ஆறு ஆண்டுகளாக எடுக்கப்பட்ட இந்த படத்தின் வெட்டி எடுக்கப்பட்ட காட்சிகளை இணைத்தால் அயலான் 2 படத்தை வெளியிட முடியும் என்ற நிலையில் இருப்பதால், விஎப்எக்ஸ் தொழில்நுட்பம் மூலம் தேவைப்படும் சில காட்சிகளை மட்டுமே மீண்டும் உருவாக்கி அயலான் 2 படம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

GBNN97pXEAAqNo8

 

இதில், நடிகர் சிவகார்த்திகேயனே நடிக்காமல், அவரது உதவியே இல்லாமல் 2ம் பாகம் வௌிவரும் பட்சத்தில், அவருக்கு சம்பளமும் தர வேண்டியது இல்லை. அயலான் முதல் பாகத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை 2ம் பாகம் மூலம் ஓரளவு ஈடுகட்டலாம். அதுவுமின்றி அயலான் 2ம் பாகம் வரப்போகிற தகவல் பரவினால், முதல் பாகத்துக்கு பப்ளிசிட்டி அதிகரிக்கும் என்றும் தயாரிப்பாளர் தரப்பில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. சிவகார்த்திகேயனின் பங்களிப்பு இல்லாமல், அயலான் 2 படம் வெளிவருவது, அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

author avatar
Sumathi