“என் வாழ்க்கையில அவர் கூட படமே பண்ணமாட்டேன்”.. வாய வச்சிட்டு சும்மா இல்லாம இயக்குனர் ஹரியை சீண்டிய ஸ்ரீகாந்த்!

By vinoth on மே 2, 2024

Spread the love

“தமிழ்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் ஹரி. இந்த படம் நல்ல கவனிப்பைப் பெற்றாலும் அவர் அடுத்து நடிகர் விக்ரம்மை வைத்து இயக்கிய “சாமி” திரைப்படம் பிளாக்பஸ்டர் திரைப்படமாக அமைந்தது. இதையடுத்து தமிழ் சினிமாவின் மிகவும் விரும்பப்படும் இயக்குனராக மாறினார்.

அதனை தொடர்ந்து “ஆறு”, “தாமிரபரணி”, “வேல்”, “சிங்கம்” என அதிரிபுதிரியான பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்தார் ஹரி. இவரது திரைப்படங்களில் திரைக்கதை விறுவிறுவென செல்லும். இது இவரது தனித்துவமான பாணியாக ஆகிப்போனது. அதே போல் இவரது திரைப்படங்களில் வசனங்கள் அனைத்தும் அனல் பறக்கும். அதே போல இவரின் படங்களின் கதாநாயகனாகவோ அல்லது ஒரு ரௌடியாகவோதான் இருப்பான். ஆக்‌ஷன் காட்சிகளுக்காக இப்படி தனது கதைக்களத்தை வடிவமைத்துக் கொள்வார் ஹரி.

   

ஹரி விக்ரம்மை வைத்து சாமி படத்தை இயக்கிக் கொண்டிருந்தார். அந்த படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாகவே ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் ஹரியை வைத்து ஒரு படத்தை இயக்க ஒப்பந்தம் செய்துள்ளார். அந்த படத்தில் ஸ்ரீகாந்தை கதாநாயகனாக நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார். ஏனென்றால் ஸ்ரீகாந்தை ரோஜாக் கூட்டம் திரைப்படம் மூலமாக அறிமுகப்படுத்தியது ஆஸ்கர் ரவிதான்.

   

இந்நிலையில் சாமி படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளில்  பிஸியாக இருந்துள்ளது. அப்போது ஸ்ரீகாந்த் அவசரப்பட்டு “என்ன இன்னும் ஹரி நமக்கு படத்தின் கதையே சொல்லவில்லை என்று யோசித்துள்ளார். அதனால் தன்னுடைய மேனேஜரை அனுப்பி ‘எப்போது கதை சொல்லப் போகிறார்’ எனக் கேட்டுவர சொல்லியுள்ளார்.

 

அவரது மேனேஜரும் சென்று நைஸாக இந்த விஷயத்தை கேட்டுள்ளார். அதைக் கேட்டதுமே கோபமாகிவிட்டாராம் ஹரி. நான் என்ன கதை சொல்லாமல் உங்களை ஷூட்டிங் கூப்பிட்டு சென்றுவிடுவேனா? ஒரு காட்சி யோசித்து உருவாக்குவது எவ்வளவு கஷ்டம் என்று கத்திவிட்டு “இனிமேல் என் வாழ்க்கையில் நான் ஸ்ரீகாந்தோடு படமே பண்ணமாட்டேன்” எனக் கூறி அந்த படத்தையே நிறுத்திவிட்டாராம். இந்த முடிவு ஸ்ரீகாந்தின் வாழ்க்கையில் மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துவிட்டது.