நடிகர் ராகவா லாரன்ஸ் மாற்றம் ஆரம்பம் என்ற அமைப்பு மூலம் பல உதவிகளை செய்ய உள்ளதாக ஏற்கனவே கூறியிருந்தார். அதில் முதல் கட்டமாக ஏழை விவசாயிகளுக்கு ட்ராக்டர் வாங்கி கொடுக்கப் போவதாக கூறியிருந்தார்.
மக்களுக்காக பல நற்பணிகளை அடுத்தடுத்து செய்து வருகிறார் லாரன்ஸ். அது மட்டுமில்லாமல் kpy பாலா இணைந்து செய்யும் உதவிகளிலும் லாரன்ஸின் பங்கு இருக்கிறது. கடந்து சில நாட்களுக்கு முன்பு லாரன்ஸ் படிக்க வைத்த இளைஞர்கள் தங்களால் முடிந்த உதவியை செய்ய போகிறோம் என ஒரு வீடியோவை வெளியிட்டனர்.
அவர்கள் லாரன்ஸின் மாற்றம் என்ற அமைப்பில் சேர இருப்பதாக கூறினார்கள். எஸ்.ஜே சூர்யா, அறந்தாங்கி நிஷா உள்ளிட்ட ஏராளமான மாற்றம் என்ற சேவையில் இணைந்தனர். இந்த நிலையில் நேற்று மே ஒன்றாம் தேதியை முன்னிட்டு லாரன்ஸ் அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டிராக்டர் வாங்கிய வீடியோக்களை பதிவிட்டுள்ளார்.
நமது நாட்டின் முதுகெலுமான விவசாயிகளுக்கு சொந்த பணத்தில் டிராக்டர் வாங்கி இருப்பதாக லாரன்ஸ் தெரிவித்துள்ளார். பல கிராமங்களுக்கு சென்று கஷ்டப்படும் விவசாயிகளுக்கு முதல் கட்டமாக தன் கையாலேயே டிராக்டர் வழங்கப் போவதாக கூறினார்.
View this post on Instagram
அடுத்ததாக லாரன்ஸ் பதிவிட்ட மற்றொரு வீடியோவில் டிராக்டரை ஏழை எளிய குடும்பத்தினருக்கு வழங்கினார். விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஏழை விவசாய குடும்பத்துக்கு முதல் டாக்டர் வழங்கப்பட்டது. அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
View this post on Instagram