சிம்பு வீட்ல விசேஷம்.. பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகவிருக்கும் குட்நியூஸ்.. செம்ம குஷியில் ரசிகர்கள்..

By Sumathi

Updated on:

நடிகர் டி ராஜேந்தருக்கு சிலம்பரசன், குறளரசன் என்ற 2 மகன்களும், இலக்கியா என்ற மகளும் உள்ளனர். பல ஆண்டுகளுக்கு முன்பே இலக்கியாவுக்கு திருமணமாகி, ஆண்குழந்தை இருக்கிறது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன், 2019ம் ஆண்டில் இஸ்லாமிய பெண் ஒருவரை காதலித்து, குறளரசன் திருமணம் செய்துக்கொண்டார். இப்போது குறளரசன் தம்பதிக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளது. இதனால் டி. ராஜேந்தர் குடும்பத்தில் அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளனர்.

   

துபாயில் உள்ள சிலம்பரசன், தன்னை பெரியப்பா என அழைக்க, தம்பி மகன் வந்துவிட்டதால் ஏகப்பட்ட உற்சாகத்தில் இருக்கிறார். அதே வேளையில் இதுகுறித்து தகவலறிந்த ரசிகர்கள். உங்க வீட்ல விசேஷம் என்பது மகிழ்ச்சிதான்.ஆனால், சிம்புவுக்கு திருமணமாகி அவர் அப்பாவானால் தானே எங்களுக்கு சந்தோஷம் என்று கூறி வருகின்றனர். நடிகர் சிம்பு ராஜ்கமல் தயாரிக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. ஆனால் இந்த சூழலில் அந்த படம் டிராப் செய்யப்பட்டு விட்டதாக பல பேரும் வதந்தியை கிளப்பி விட்டு வருகின்றனர். அது சிறிதளவும் உண்மையல்ல.

இந்நிலையில் இந்த படத்தின் விஎப்எக்ஸ் பணிகள் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் ஒரு பகுதியில் நடந்து வருவதாக தகவல் சில தினங்களுக்கு முன் வெளியானது. படம், வரலாற்று கதையை பின்னணியாக கொண்டதாக இருப்பதால் படப்பிடிப்புக்கு முன்னதாகவே பல முன் தயாரிப்பு வேலைகளை செய்துவருவதால் படத்தின் ஷூட்டிங் தள்ளிப் போகிறது.

எனினும் சிம்பு ரசிகர்கள் மற்றும் சினிமா ரசிகர்களை சந்தோஷப்படுத்தும் விதமாக. படக்குழு புதிய ஏற்பாட்டை ஒன்றை செய்து வருகிறது. வரும் பிப்ரவரி 3ம் தேதி நடிகர் சிம்புவின்பிறந்த நாள் வருகிறது. அன்று. சிலம்பரசன் நடிக்கும் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு, படம் குறித்த நம்பிக்கையை ஏற்படுத்த முடிவு செய்துள்ளது.

author avatar
Sumathi