Connect with us

பிரதீப் மீது அடுக்கடுக்காக வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்… ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றுவாரா கமல்…? வெளியான பரபரப்பு ப்ரோமோ…

CINEMA

பிரதீப் மீது அடுக்கடுக்காக வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்… ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றுவாரா கமல்…? வெளியான பரபரப்பு ப்ரோமோ…

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக் பாஸ். 6 சீசன்களை கடந்த இந்த நிகழ்ச்சியின் 7 வது சீசன் தற்பொழுது ஒளிபரப்பாகி வருகிறது.  அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியானது இன்றுடன் 35 நாட்களை நிறைவு செய்துள்ளது. இந்தபிக் பாஸ் நிகழ்ச்சியில்  மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இவர்களில் அனன்யா, பாவா செல்லத்துரை, விஜய் வர்மா,  வினுஷா மற்றும் யுகேந்திரன்  என 5 போட்டியாளர்கள் தற்பொழுது வரை வெளியேற்றப்பட்டுள்ளனர்.

   

பிக் பாஸ் வீட்டை விட்டு 5 போட்டியாளர்கள் வெளியேற, பாடகர் கானா பாலா, சீரியல் நடிகை அர்ச்சனா, சீரியல் நடிகர் தினேஷ், அன்னபாரதி, RJ பிராவோ என 5 வைல்ட் கார்டு போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் களமிறங்கி உள்ளனர். வந்த முதல் நாளிலிருந்தே சைக்கோ போல் நடந்து கொண்டு மக்களின் கோபத்தை சம்பாதித்து வருகிறார் பிரதீப். இவரின் நடவடிக்கைகளும், பேச்சு வார்த்தைகளும் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே தான் வருகிறது.

   

 

இந்த நிலையில், இன்று வெளியான ப்ரோமோவில், பிரதீப் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை போட்டியாளர்கள் கூறுகின்றனர். ‘நைட்ல ஒழுங்கா தூங்க கூட முடியல. சில பேருக்கு இவரால பயமா இருக்கு’ என பூர்ணிமாவும், ‘கெட்ட வார்த்த பேசுறாரு.அதுவும் தவறான நோக்கத்தில் பேசுறாரு’ என ஜோவிகாவும், ‘என்னோட அருணாக்கயிறு பத்தி இவரு பேசுறாரு’ என ரவீனாவும்,

‘டாய்லெட் போகும் போது கதவ திறந்துட்டு தான் இருக்காரு’ என மணியும் கூற ‘இதுக்கு என்ன தீர்ப்பு வழங்கணும் என்று எனக்கு தெரியும்’ என சொல்லி முடிக்கிறார் கமல். இத்துடன் இந்த ப்ரோமோ வீடியோ முடிந்துள்ளது. இதைத்தொடர்ந்து பிரதீப்க்கு ரெட் கார்டு கொடுக்கப்படும் என பரவலாக கூறப்பட்டு வருகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கப்போகிறது என்பதை. இதோ அந்த ப்ரோமோ வீடியோ…

More in CINEMA

To Top