#image_title
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். ஏழு சீசன்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வந்த கமல்ஹாசன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டார். ஒரு சில தனிப்பட்ட வேலைகள் இருப்பதால் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதாக தெரிகிறது.
அவருக்கு பதிலாக பிரபல நடிகரான விஜய் சேதுபதி பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார். முன்னதாக சிம்பு, ராதிகா, சூர்யா, நயன்தாரா, சரத்குமார் உள்ளிட்ட பல பிரபலங்களின் பெயர்கள் தொகுப்பாளர் பட்டியலில் இடம் பெற்றது. ஆனால் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கப் போகிறார் என்பது உறுதியானது.
இதற்கான ப்ரோமோ கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி வருகிற அக்டோபர் மாதம் ஆறாம் தேதி முதல் தொடங்க உள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியாகி ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். கடந்த 2017-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சி 7 சீசன்களை வெற்றிகரமாக கடந்தது.
முதல் சீசனில் ஆரவ் பிக் பாஸ் டைட்டிலைட் வென்றார். இரண்டாவது சீசனில் ரித்விகா பிக் பாஸ் வின்னராக தேர்வு செய்யப்பட்டார். மூன்றாவது சீசனில் மலேசியாவை சேர்ந்த முகேன் ராவ் பிக் பாஸ் டைட்டிலை வென்றார். நான்காவது சீசனில் நடிகர் ஆரி பிக் பாஸ் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஐந்தாவது சீசனில் ராஜு பிக் பாஸ் டைட்டிலை வென்றார்.
ஆறாவது சீசனில் நடிகர் அசீம் பிக் பாஸ் டைட்டிலை வென்றார். ஏழாவது சீசனில் சின்னத்திரை நடிகையான அர்ச்சனா பிக் பாஸ் டைட்டிலை தட்டி சென்றார். இந்த சீசனில் யார் டைட்டிலை வெல்லப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
#image_title
பிரபல யூடியூபர் கௌரவ் தனேஜா தான் வாங்கிய தர்பூசணி ஒன்றில் இருந்து நுரை பொங்கி வழியும் வீடியோவை சமூக வலைதளங்களில்…
மத்தியப் பிரதேச மாநிலம் கர்கோன் மாவட்டத்தில், திருமணச் சடங்கின் போது பூசப்பட்ட மஞ்சள் அலர்ஜியானதால் மணப்பெண் ஒருவரின் முகம் வீங்கிப்போன…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், புதர்கள் நிறைந்த ஒரு பகுதியில் நாய்க்கும் ராஜநாகத்திற்கும் இடையே நடந்த கடுமையான…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற பாலாஜி கோயில் வளாகத்தில், டெலிவரி பாய் வேடத்தில் வந்த வாலிபர்…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், கிராமப்புறத்தைச் சேர்ந்த சிறுவர்கள் சிலர் தங்களின் கைவினைத் திறமையால் ஒரு சிறிய…
ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் குடும்பத் தகராறு காரணமாக தந்தை ஒருவரே தனது 5 வயது மகனைக் கொலை செய்துவிட்டு, தானும்…