பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தனது வேலையை ஆரம்பித்த ரவீனா.. நீண்ட இடைவேளைக்கு பிறகு வெளியிட்ட புகைப்படங்கள் வைரல்..

By Mahalakshmi

Updated on:

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ரவீனாவும் இருந்தார்கள். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த நிலையில் போட்டியாளர்கள் அனைவரும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்து தனது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினார்கள்.  தற்போது, இதிலிருந்து வெளியே வந்த ரவீனா முதல்முறையாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோவை பதிவிட்டுள்ளார்.

   

மேலும், இதில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் சிலர்  வீடியோ மூலம் இணையத்தில் வெளியிட்டு பிக் பாஸ் பற்றி தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வந்துள்ளார்கள்; அதில்  பிக் பாஸ் வீடு தனக்கு நிறைய பாடங்களை கற்றுக் கொடுத்து உள்ளதாக பலர் கூறியிருக்கிறார்கள்.  ரவீனா பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போது போட்டியாளர் மணியுடன் காதல் வசப்பட்டு  இருப்பதாக தகவல் வந்தது. மேலும், இருவருக்கு இடையில் இருக்கும் காதல் பரிமாற்றத்தை நாமே பிக் பாஸ் வீட்டின் வீடியோ மூலம் பார்த்திருக்கிறோம்.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ரவீனா மீண்டும் இறுதி வார  டைட்டில் வின்னர் செலிப்ரேஷனில் மறுபடியும் வீட்டிற்குள் வந்தார். அப்போது  ரவீனா மற்றும் மணி இடையே பிரேக் அப் ஏற்பட்டது அதையும் நாம் நன்கு அறிவோம் அதன் பிறகு ரவீனா மணி காதல் பற்றி எந்த தகவலும் வரவில்லை.

தற்போது ரவீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு கலர் சேலையில் மிக அழகாக போட்டோக்களை எடுத்து பதிவிட்டுள்ளார். இதில் சோஷியல் மீடியா சீண்டல்கள் எல்லாம் பரவாயில்லை, நிஜ வாழ்க்கையில் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள் என்று போஸ்டில் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு ரவீனாவின் ரசிகர்கள் லைக்ஸ் மட்டும் கமெண்ட் தெரிவித்து வருகிறார்கள்.

author avatar
Mahalakshmi