பிக் பாஸ் வீட்டை விட்டு வெளிய வந்த அப்புறம், என் வீட்டுக்கு வந்து ஒன்னு பண்ணான் பாருங்க.. மேடையில் கூல் சுரேஷ் பற்றி ஓப்பனாக பேசிய சந்தானம்..

By Mahalakshmi

Published on:

பிக் பாஸ் சீசன் 7  நிகழ்ச்சியின் போட்டியாளராக பிக் பாஸ் வீட்டிற்குள் வருவதற்கு முன்னதாக கூல் சுரேஷ் சந்தானம் நடிப்பில் வெளியாகும் “வடக்குப்பட்டி ராமசாமி” திரைப்படத்தில் நடித்துள்ளார் மேலும் இந்தத் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்த நிலையில் கூல் சுரேஷ் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் அவர் செய்த காரியத்தை மேடையில் சந்தானம் போட்டுடைத்தார்.

   

இந்த நிகழ்ச்சியில் பேசிய கூல் சுரேஷ், உங்களுக்குத்தான் சந்தானம் வடக்குப்பட்டி ராமசாமி, ஆனால் எனக்கு அவர் குலதெய்வம் சாமி என்று நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். சந்தானத்தின் முந்தைய படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது அவரது வடக்குப்பட்டி ராமசாமி படம் குறித்து தான் கேட்டதாகவும் அவர் உடனடியாக இயக்குனர் கார்த்திக் யோகியிடம் போன் செய்து பேச சொன்னதாகவும் கூறினார்.

அவர் பேசியவுடன் உடனடியாக இந்தப் படத்தில் நடிக்கும் வாய்ப்பு தனக்கு கிடைத்ததாகவும் கூல் சுரேஷ் மகிழ்ச்சியடைந்தார். இந்தப் படம் குறித்து கார்த்திக் யோகி தன்னிடம், இந்தப் படத்தை தொடர்ந்து தியேட்டர் வாசலில் இனி தான் கத்த வேண்டாம் என்றும் தியேட்டர் உள்ளே ரசிகர்கள் தன்னை பார்த்து கத்துவார்கள் என்று கூறியதையும் அவர் நினைவு கூர்ந்தார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சந்தானம், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தான் வேறு மாதிரி மாறிவிட்டதாக கூல் சுரேஷ் தன்னிடம் கூறியதாக குறிப்பிட்டார்.

ஆனால் அவர் எந்தவகையிலும் மாறவில்லை என்று காமெடியாக கூறிய சந்தானம், பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் தனக்கு கால் செய்த கூல் சுரேஷ், சால்வை, மாலை போட வேண்டும் என்று கூறினார். அதனால் நான் வீட்டிற்கு அழைத்தேன்; ஆனால் தன்னை நேரில் சந்தித்தபோது, என் கையில் அவற்றை கொடுத்து அவருக்கு போட வைத்து போட்டோ எடுத்ததையும் குறிப்பிட்டார். தன்னிடமிருந்து நேரடியாக நடிகர் சிம்புவின் அப்பாவான நடிகர்  டி ஆர் ராஜேந்திரன் வீட்டுக்கு போய் அவரையும் இதேபோல கூல் சுரேஷ் ஏமாற்றியதாகவும் சந்தானம் மேடையில் தெரிவித்தார்.

author avatar
Mahalakshmi