கவர்ச்சி ரொம்ப ஜாஸ்தி.. வெளிநாட்டில் பிரபல நடிகையுடன் சுற்றி திரியும் பிக் பாஸ் மாயா.. வைரலாகும் வீடியோ..

By Begam

Updated on:

விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஆனது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி நிறைவடைந்துள்ளது. இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் மொத்தம் 23 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களின் மக்களால் அதிகம் வெறுக்கப்பட்ட ஒரே போட்டியாளர் அது மாயா மட்டும் தான்.

maya2

ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த நாள் முதலே கமலஹாசனின் ஆதரவு மாயாவிற்கே இருந்து வந்தது. அவர் செய்த எந்த ஒரு செயலையும் அவர் தட்டி கேட்டதே கிடையாது. இதற்கு காரணம் அவர் ஏற்கெனவே கமலுடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடித்திருந்தார். எனவே தான் அவர் மாயா செய்யும் தவறுகளை எல்லாம் சுட்டிக்காட்டவில்லை என்றும் மாயாவால் நடிகர் கமலஹாசனும் இணையத்தில் அதிகம் ட்ரோல் செய்யப்பட்டார்.

   

ஒரு கட்டத்தில் இது பிக் பாஸா..? இல்ல மாயா பாஸா..? என்றெல்லாம் ரசிகர்கள் கேள்வி எழுப்ப தொடங்கிவிட்டனர்.உண்மையாக சொல்ல போனால் மாயா மட்டும் இல்லையென்றால் இந்த சீசனில் கன்டென்ட் கொடுக்க யாருமே இருந்திருக்க மாட்டார்கள். தனது  திறமையான விளையாட்டு , விளையாட்டு யுக்தியை பயன்படுத்தி இவர் பல போட்டியாளர்களை வீழ்த்தியுள்ளார். என்னதான் பலர் இவரை சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்து வந்தாலும் ஒருபுறம் இவரை ஆதரிக்கும் ஒரு ரசிகர்கள் கூட்டமும் இணையத்தில் இவருக்கு உள்ளது.

தற்பொழுது மாயா தனது இன்ஸ்டா பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக உள்ளார். இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் நடிகை அதிதி பாலனுடன் இணைந்தது தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலா சென்ற ஹாட் புகைப்படங்கள் மற்றும் விடியோவை பகிர்ந்துள்ளார். இதனை அவரது ரசிகர்கள் படுவைரலாக்கி வருகின்றனர். இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Tamilan Media (@tamilan_media_)