“அவரை எனக்கு ரொம்ப புடிக்கும்”… பிக் பாஸுக்கு பிறகு முதன்முதலாக ஐஷு கொடுத்த பேட்டி.. வைரலாகும் வீடியோ..

By Begam

Updated on:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சமீபத்தில் நிறைவடைந்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் கலந்து கொண்ட 23 போட்டியாளர்களின் ரசிகர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்த போட்டியாளர்களில் ஒருவர் தான் ஐஷு. இவர் ஏற்கெனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான அமீரின் உறவினர் என்பதும் நாம் அறிந்ததே.

   

இந்த சீசனில் நிக்சன், ஐஷு காதல் விளையாட்டு தான் ரசிகர்களை பயங்கரமாக எரிச்சலடைய வைத்தது. ஏனெனில்  கண்ணாடி குறுக்கே இருக்க இருவரும் மாறி மாறி முத்தம் கொடுத்துக் கொண்டது, ஐஷுவின் வேட்டியை சரிசெய்ய நிக்சன் வேட்டிக்குள்ளே கை விட்டது என பல்வேறு  செயல்களில் இவர்கள் ஈடுபட்டனர்.

தனித்தனியாக விளையாடிய போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற  ஐஷு , காதல் என்ற பெயரில் செய்த அட்டகாசங்கள் ரசிகர்களை வெறுப்படையை வைத்தது. இதைத்தொடர்ந்து முதலில் ஐசு பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். வெளியே வந்த இவர் பிரதிப் ரெட் கார்டு விவகாரம் குறித்தும், தான் பிக்பாஸ் வீட்டில் நடந்து கொண்ட முறை குறித்தும் மிகவும் மனம் வருந்தி அனைவரிடமும் மன்னிப்பு கேட்டு பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

இதை தொடர்ந்து  தற்பொழுது அவர் முதன்முறையாக பிரதீப் குறித்து விஜய் தொலைக்காட்சிக்கு அளித்த நேரடி பேட்டியில் கூறியுள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது, “பிரதீப் எனக்கு ரொம்ப புடிக்கும். பிக் பாஸ் வீட்டுக்கு வெளியவும், உள்ளேயும் நாங்க friends தான். அவர் ஒரு இன்டெரெஸ்ட்டிங் & என்டேர்டைனிங் பெர்சன்” என்று கூறிய வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…