Connect with us

சீனியர் நடிகரென்றும் பாராமல் நெப்போலியனைத் திட்டிய விஜய்.. ‘போக்கிரி’ பட ஷூட்டிங்கில் நடந்தது என்ன?

CINEMA

சீனியர் நடிகரென்றும் பாராமல் நெப்போலியனைத் திட்டிய விஜய்.. ‘போக்கிரி’ பட ஷூட்டிங்கில் நடந்தது என்ன?

நடிகர் நெப்போலியன் தமிழ் சினிமாவில் 90 களில் வில்லனாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகனாக சீவலப்பேரி பாண்டி மற்றும் எட்டுப்பட்டி ராசா உள்ளிட்ட திரைப்படங்களில் ஒரு சுற்று வந்தார். பின்னர் விருமாண்டி மற்றும் தசாவதாரம் உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தார்.

திமுகவின் முக்கியப் புள்ளியான கே என் நேருவின் உறவினரான நெப்போலியனின் இயற்பெயர் குமரேசன். சினிமாவுக்கு வருவதற்கு முன்பாகவே அவர் திமுகவுக்காக தேர்தல் வேலைகள் செய்தும், தனது மாமாவான நேருவுக்கு உதவியாளராகவும் இருந்துள்ளார்.

#image_title

   

இதனால் சினிமா புகழடைந்த பிறகு அரசியலிலும் ஈடுபட்ட நெப்போலியன் திமுக சார்பாக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். பின்னர் திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அதன் பின்னர் அரசியலில் இருந்து விலகி அமெரிக்காவுக்கு சென்று அங்கேயே செட்டில் ஆகிவிட்டார்.

 

இடையில் இந்தியாவுக்கு அவ்வப்போது வந்து ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த ஒரு நேர்காணலில் பிரபல நடிகர் விஜய்யோடு தனக்கு ஏற்பட்ட மனக்கசப்பான சம்பவம் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.

#image_title

அதில் “நானும் விஜய்யும் இணைந்து போக்கிரி என்ற படத்தில் நடித்தோம். அப்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் என்னுடைய நண்பர்கள் சிலர் வந்திருந்தனர். அவர்கள் விஜய்யை சந்திக்க வேண்டும் எனக் கூறினர். அதனால் அவரிடம் அழைத்து செல்லலாம் என அவரது கேரவனுக்கு சென்றேன். அப்போது நான் நேரடியாக அவரிடம் அனுமதி வாங்காமல் அவர்களை அழைத்து சென்றுவிட்டேன்.

அதில் கோபமான அவர் என்னிடம் கடுமையாக பேசி என்னைத் திட்டிவிட்டார். அது எனக்கு மிகப்பெரிய மன உளைச்சலை ஏற்படுத்திவிட்டது. ஒரு சீனியர் நடிகரான என்னிடம் அவர் இதுகுறித்து பக்குவமாக பேசியிருக்கலாம். ஆனால் அவர் நடந்துகொண்ட முறை சரியில்லை.

#image_title

அதனால் அதன் பிறகு நான் அவரை பார்க்கவில்லை. அவர் படங்களையும் பார்ப்பதில்லை. இனிமேல் அவர் படங்களிலும் நான் நடிக்க மாட்டேன்” எனக் கூறியுள்ளார். மிகவும் அமைதியானவராக தோற்றமளிக்கும் விஜய் தன் பொறுமையை இழந்த சம்பவங்களில் ஒன்றாக இது அமைந்துள்ளது.

 

Continue Reading
To Top