விஜய் தொலைக்காட்சியில் பெரும் ஆரவாரத்துடன் தொடங்கிய தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தற்பொழுது பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்நிகழ்ச்சியில் மொத்தம் 23 போட்டியாளர்கள் அதாவது 18 போட்டியாளர்கள் முதலில் களம் இறக்கப்பட இவர்களை தொடர்ந்து 5 வைல்ட் கார்டு போட்டியாளர்கள் என 23 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்ட நாள் முதலே மக்கள் மத்தியில் வெறுப்பை சம்பாதித்தவர் மாயா. நடிகை மாயா கமலின் விக்ரம் படத்தில் நடித்து மிகவும் பிரபலமானவர். இது மட்டுமின்றி ரஜினியின் 2.0, விஜயின் லியோ, விக்ரமின் துருவ நட்சத்திரம் என பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்துள்ளார் .ஆனால் இவற்றையெல்லாம் விட பிக் பாஸ் நிகழ்ச்சி இவருக்கு மிகப்பெரிய அளவில் பிரபலத்தை ஏற்படுத்தி உள்ளது.

குறிப்பாக பிரதீப் ரெட் கார்ட் விஷயத்தில் மாயாவின் சூழ்ச்சி தான் காரணம் என பிரதீப் ஆதரவாளர்கள் தற்பொழுது வரை கடுமையான கோபத்தில் உள்ளனர். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் செய்யும் அடாவடிகள் ஏராளம். ஆனால் கமலஹாசன் இவரை எந்த ஒரு கேள்வியும் அவ்வளவாக இவரை கேட்பது கிடையாது. இதனால் அவரும் மாயாவின் ஆதரவாளராக மாறிவிட்டதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர் .

இதை தொடர்ந்து தற்பொழுது அவர் தனது விளையாட்டை தந்திரமாக விளையாண்டு வருகிறார். நடிகை மாயா 1991 பிறந்தவர். இவருக்கு மொத்தம் மூன்று சகோதரிகள் உள்ளனர். மாயாவின் அக்கா ஸ்வாகதா கிருஷ்ணன் ஒரு பாடகி இவரை நாம் பார்த்திருப்போம். இந்நிலையில் பிக் பாஸ் பாயா மாயாவின் தாய் தந்தை மற்றும் மூன்று சகோதரிகளின் புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
