பிக் பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறும் வாய்க்கோளாறு… யாருன்னு தெரிஞ்சா அப்பாடான்னு நிம்மதியாவீங்க…

By Begam

Published on:

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இன்னும் 5 வாரங்களில் முடிவடைய இருக்கும்  நிலையில் 13 போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் உள்ளனர். இவர்களில் வாரம் ஒருவர் குறைந்த வாக்குகளின் அடிப்படையில்  வெளியேற்றப்படுவார்கள்.

   

ஆனால் கடந்த வாரம் மிக்ஸாம் புயல், சென்னை வெள்ளத்தின் காரணமாக எலிமினேஷன் இல்லை என அறிவிக்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து இந்த வாரம் இரண்டு எவிக்சன் கூட இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது .

அதன்படி இந்த வார நாமினேஷனில் அர்ச்சனா, தினேஷ், விஷ்ணு, நிக்சன், கூல் சுரேஷ், அனன்யா என 6  போட்டியாளர்கள் உள்ளனர். இவர்களில் அர்ச்சனா அதிக ஓட்டுகள் பெற்று முன்னிலையில் உள்ளார். இவரை தொடர்ந்து தினேஷ் அடுத்த இடத்திலும் ,அதற்கடுத்த இடங்களை விஷ்ணு, நிக்சன் பிடித்திருக்கின்றனர்.

கடைசி இடங்களை கூல் சுரேஷ், அனன்யா பிடித்துள்ளனர் .எனவே இந்த இருவரில் ஒருவர் வெளியேறுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும், அல்லது இருவருமே வெளியேற்றப்படலாம் எனவும் இணையத்தில் தற்போது தகவல்கள் வைரலாக்கப்பட்டு வருகிறது.