நடிகர் விஜயகுமார் – மஞ்சுளா நட்சத்திர தம்பதியின் மூத்த மகள் தான் நடிகை வனிதா விஜயகுமார். தளபதி விஜய்க்கு ஜோடியாக ‘சந்திரலேகா’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான வனிதா விஜயகுமார் தமிழ், தெலுங்கில் சில படங்களில் நடித்துள்ளார். மேலும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் பிரபலமானார் வனிதா. பின்னர் பல சீரியல்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்றார்.
இதைத்தொடர்ந்து வனிதாவின் மகளான ஜோவிகா சமீபத்தில் ஒளிபரப்பாகி நிறைவடைந்த பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். 18 வயதே ஆன ஜோவிகா தான் பிக்பாஸ் 7 சீசனின் இளவயது போட்டியாளர் . தனக்கு சிறு வயதிலிருந்தே படிப்பு வராததால் 9-ம் வகுப்பு வரை மட்டுமே ஜோவிகா படித்ததாகவும், நடிப்பின் மீது இருந்த ஆசையால் நடிப்பை கற்றுக்கொண்டு வருவதாக சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார்.
ஆனால் படிப்பு முக்கியம், ஒரு டிகிரியாவது வாங்க வேண்டும் என்று சக போட்டியாளர்களான விசித்ரா, யுகேந்திரன் கூறிய போது இதை பற்றி அதிகம் பேச வேண்டாம் என்று கூறிவிட்டார். இதனால் ஜோவிகாவுக்கு என்று தனி ரசிகர் கூட்டமே உருவாகி வருகிறது. இதுகுறித்து வனிதா பேசிய போது , ‘ஜோவிகாவுக்கு படிப்பு வரவில்லை என்றாலும், அவருக்கு நிறைய திறமைகள் இருப்பதாகவும், நடிகையாக வேண்டும் என்ற தனது மகளின் கனவுக்கு எந்த தடையும் போடவில்லை என்றும் கூறியிருந்தார்.
பள்ளி படிப்பை முடிக்கவில்லை என்றாலும், பல திறமைகளை வளர்த்து வரும் ஜோவிகாவுக்கு சமூக வலைதளங்களில் ஒரு சாரார் ஆதரவு தெரிவித்தாலும், மறுபுறம் ஒருசிலரோ 12 ஆம் வகுப்பு வரையாவது கண்டிப்பாக கல்வி கற்க வேண்டும் என்று கூறி வந்தனர். இப்படி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசு பொருளாக மாறினார் ஜோவிகா.
View this post on Instagram
இந்நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த இவர் தற்பொழுது மீண்டும் தனது கெரியரில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். அதன்படி சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடிய இவர் , தற்பொழுது கோழி இறகால் மேலாடை அணிந்து உச்சகட்ட கவர்ச்சியில் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களும், வீடியோவும் இனையத்தில் படுவைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…
View this post on Instagram