செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தவர் திவ்யா துரைசாமி. பல்வேறு முன்னணி தமிழ் செய்தி சேனல்களில் பணியாற்றிய இவர், யூடியூப்பில் சினிமா விமர்சனங்களையும் செய்து வந்தார். படிப்படியாக மாடலிங் துறையிலும் ஆர்வம் காட்டி வந்த திவ்யா துரைசாமிக்கு சினிமாவில் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்கிற ஆர்வமும் இருந்து வந்தது.
இவர் முதன்முதலில் நடித்த திரைப்படம் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும். ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கிய இப்படத்தில் சிறிய கேரக்டர் ரோலில் நடித்திருந்தார்.
இதையடுத்து கொரோனா ஊரடங்கு சமயத்தில் விதவிதமாக போட்டோஷூட்களை நடத்தி அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்த திவ்யாவுக்கு படிப்படியாக பட வாய்ப்புகளும் கிடைக்கத் தொடங்கின.
இவர் பாண்டிராஜ் – சூர்யா கூட்டணியில் வெளிவந்த எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அப்படத்தில் இவரது நடிப்புக்கு பாராட்டுக்களும் கிடைத்தன.
அதுவரை கேரக்டர் ரோல்களில் நடித்து வந்த திவ்யா துரைசாமி, முதன்முதலில் ஹீரோயினாக நடித்த திரைப்படம் குற்றம் குற்றமே. சுசீந்திரன் இயக்கிய இப்படத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் திவ்யா.
இவர் படங்களைத் தவிர கடந்த 2021-ம் ஆண்டு வெளிவந்த மதில் என்கிற வெப் தொடரிலும், 2022-ம் ஆண்டு ரிலீஸ் ஆன ஃபிங்கர்டிப் சீசன் 2 வெப் தொடரிலும் நடித்திருந்தார். தற்போது நடிகை திவ்யா துரைசாமி நடிப்பில் வாழை என்கிற திரைப்படம் தயாராகி வருகிறது. மாரி செல்வராஜ் இந்த திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
இதுவரை படங்களில் பெரும்பாலும் ஹோம்லி வேடங்களில் நடித்துள்ள திவ்யா துரைசாமி, போட்டோஷூட்டிலும் பெரியளவில் கவர்ச்சி கட்டாமல் இருந்து வந்தார். ஆனால் தற்பொழுது இவர் கவர்ச்சி தூக்கலாக போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார். அந்தவகையில் தற்பொழுது நடிகை திவ்யா துரைசாமி தற்பொழுது ஹாட் லுக்கில் டெஸ்லாவை காட்டி வெளியிட்ட புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.