தமிழ் சினிமாவின் டஸ்கி ஸ்கின் அழகியாக ரசிகர்களை மனதை கவர்ந்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். சன் தொலைக்காட்சியில் ‘அசத்தப்போவது யாரு’ நிகழ்ச்சியில் தொகுப்பாளராக தனது திரை பயணத்தை தொடங்கினார்.
இதை தொடர்ந்து கலைஞர் தொலைக்காட்சியில் ‘மானாட மயிலாட’ போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். ‘நீதானா அவன்’ என்ற படத்தில் மூலம் வெள்ளித்திரையில் கால்பதித்தார்.
இதை தொடர்ந்து அவர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவான ‘அட்டகத்தி’ திரைப்படத்தில் அமுதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றா.ர் இந்த படம் அவருக்கு ஒரு நல்ல அறிமுகத்தை கொடுத்தது. இதைத்தொடர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த காக்கா முட்டை, ரம்மி, திருடன் போலீஸ், வடசென்னை ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெற்றது.
தற்பொழுது தமிழ் சினிமாவில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தனித்துவமான கதாபாத்திரங்களில் நடைபெறும் ஐஸ்வர்யா ராஜேசுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ் இயக்குனர் விருமாண்டி இயக்கத்தில் விஜய் சேதுபதி உடன் இணைந்து நடித்த க|பெ ரணசிங்கம் திரைப்படம் இவருக்கு மக்கள் மத்தியில் பாராட்டை பெற்று தந்தது.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த பர்ஹானா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இத்திரைப்படத்திற்கு இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பை தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
இவர் சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். குடும்ப பாங்காக நடித்துக்கொண்டிருந்த இவர் தற்பொழுது எல்லை மீறி கவர்ச்சி காட்ட தொடங்கியுள்ளார். அந்தவகையில் தற்பொழுது இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர்.