இப்போது நடிகைகள் எல்லாம் சரியாக பட வாய்ப்புகள் கிடைக்காததால் ஒன்லி ஃபேன்ஸ் அக்கவுண்ட் போல இன்ஸ்டாகிராமில் இருக்கும் சப்ஸ்கிரிப்ஷன் முறையை கையாள ஆரம்பித்து விட்டார்கள். நடிகை கிரண் தனியாக ஆப் ஒன்றை வைத்துக் கொண்டு அதில் பலான போட்டோக்களையும், வீடியோக்களையும், வீடியோ கால்களையும் செய்து சம்பாதித்து வருவதாக பேச்சுக்கள் அடிபட்டது. அதேபோல சமீபத்தில் பிக்பாஸ் பிரபலம் தர்ஷா குப்தாவும் இதே வேலையை செய்துதான் பணம் அதிகளவில் சம்பாதிப்பதாக கூறப்பட்டது.
இந்நிலையில் இன்ஸ்டாகிராம் சப்ஸ்கிரிப்ஷன் மூலம் கவர்ச்சிப் படங்களை பகிர்ந்து பணம் சம்பாதித்து வந்த பிக்பாஸ் பிரபலம் வர்ஷினி வெங்கட், இப்போது தான் அவ்வாறு செய்வதில்லை என்று கூறியுள்ளார். இன்ஸ்டாகிராம் சப்ஸ்க்ரிப்ஷன் மூலம் மாதம் ரூ.10000 மட்டும் தான் சம்பாதித்தேன் என்றும், இதனால் சினிமா வாய்ப்புகள் பாதிக்கப்படுவதால், அதை நிறுத்தி விட்டதாகவும் கூறியுள்ளார். இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் ஜிம் உடையில் வொர்க்கவுட் செய்யும் பல வீடியோக்களை பகிர்ந்துள்ளார்.
