தோனியால் என் வாழ்க்கையே போச்சு… அவருக்கு பிடித்தவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கொடுப்பார்.. திவாரி பரபரப்பு குற்றசாட்டு..!!

By Soundarya on ஆவணி 27, 2025

Spread the love

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தன் போது தோனியின் தலைமையிலான இந்திய அணியில் அறிமுகமான மனோஜ்  திவாரி, மொத்தமாக 12 ஒருநாள், 3 டி20 சர்வதேச போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். இவர் திறமையான வீரராக அறியப்பட்டாலும், இந்திய அணியில் இவர்க்கு பெரிதும் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று கூறி தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

அதில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் திவாரி, தன்னை பிடிக்காததால் எம்.எஸ்.தோனி தனது கெரியரை முடிவுக்கு கொண்டுவந்தார் என குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ள அவர், “தோனி அவருக்கு விருப்பமானவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளிப்பார். அவர் அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டார் என்பதை அவர் ஒப்புக்கொண்டாலும், எனக்கு எதிரான நடவடிக்கை ஏன் எடுத்தது என்பதை அறிய முடியவில்லை. நான் என்ன தவறு செய்தேன்? என்று கூறியுள்ளார். இது தற்போது  கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.