#image_title
விஜய் தொலைக்காட்சியில் கடந்த அக்டோபர் 1ம் தேதி தொடங்கப்பட்ட சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோ தான் பிக் பாஸ் சீசன் 7. இந்நிகழ்ச்சி ஜனவரி 14-ஆம் தேதியான நேற்றுடன் நிறைவு பெற்றது. ஒட்டுமொத்தமாக இந்த சீசனில் 23 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இவர்களில் வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் 5 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தனர் .
முழுக்க முழுக்க இந்த சீசனில் போட்டியாளர்கள் டாஸ்குகளை விட அதிக சண்டைகளையும், வன்மத்தையும் மட்டுமே நிகழ்ச்சியில் காட்டினார்கள். இரண்டு வீடுகள் என பிரித்து வைக்கப்பட்ட வீடுகள், இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்ட போட்டியாளர்கள் சண்டை சச்சரவு என சென்ற இந்த சீசனில் பிக் பாஸ் டைட்டில் வெல்லப்போவது யார் என்றும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆவலை ஏற்படுத்தியது.
இந்நிலையில் போட்டியின் இறுதியில் விஷ்ணு, மாயா, தினேஷ், அர்ச்சனா மற்றும் மணி என ஐந்து பேர் ஃபைனலிஸ்டாக தேர்வாகியிருந்தனர். இவர்களில் அதிகமான வாக்குகள் பெற்று அர்ச்சனா தான் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று ரசிகர்களால் பெரிதும் ஆவலாக எதிர்பார்க்கப்பட்டார் .
முதன்முறையாக பிக் பாஸ் வரலாற்றில் வைல்ட் கார்டு என்ட்ரியில் நுழைந்த அர்ச்சனா பிக் பாஸ் டைட்டிலை தட்டி தூக்கியுள்ளார். இந்நிலையில் டைட்டில் வின்னர் அர்ச்சனாவுக்கு 50 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. 15 லட்சம் ரூபாய்க்கு ஒரு பிளாட்டும் மற்றும் ஒரு காரும் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. அந்த காரின் பேசிக் மாடல் விலை மட்டும் சுமார் 15 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது . மொத்தமாக சம்பளம் மட்டுமின்றி டைட்டில் ஜெயித்ததன் மூலம் 80 லட்சம் வரை பரிசாக ரூபாய் பரிசாக அர்ச்சனாவுக்கு வாரி வழங்கியுள்ளார் பிக் பாஸ்.
ஐபிஎல் 2026 சீசனில், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு…
“நீ ஒரு முஸ்லிம், உன்னால் இந்திய ராணுவத்தில் சேர முடியாது” என ஏளனம் செய்தவர்களின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்து, ராணுவத்தில்…
பெங்களூரு பகுதியில் செல்லப் பிராணிகளால் அண்டை வீட்டாருக்கு இடையே ஏற்பட்ட விசித்திரமான மோதல், காவல்துறையினரின் தலையீட்டால் ஒருவழியாகச் சமாதானத்தில் முடிந்தது.…
சமீபத்திய ஈரான்-அமெரிக்கா மோதலின் பின்னணியில், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளைக் கண்காணிக்க ஈரான் சீனத் தயாரிப்பு செயற்கைக்கோளைப்…
அர்ஜென்டினாவில் பள்ளி மாறுவேடப் போட்டிக்காகத் தனது மகனைத் தயார் செய்த தாயின் விபரீத முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போட்டியில்…
பெங்களூரு பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க சுவர்ணா என்ற தாய், தனது 13 வயது மகளைக் கொலை செய்துவிட்டுத் தானும்…