Categories: சினிமா

‘இப்படிபட்ட பெண்கள் இருக்கும்போது கட்டாயமா’ … பிக் பாஸ் டைட்டில் வின்னர் அர்ச்சனா குறித்து சர்ச்சை கருத்து கூறிய சின்மயி…

Spread the love

தென்னிந்திய தமிழ் சினிமாவில் பின்னனி பாடகிகளில் ஒருவராக வலம் வந்தவர் பிரபல பின்னணி பாடகி சின்மயி . இவர் சினிமாவில் பல படங்களில் பால பாடல்களை பாடியுள்ளார். இருப்பினும் இவர் இதன் மூலம் பிரபலமானதை விட பல்வேறு சர்ச்சைகளில் பிரபலம் அடைந்தது தான் அதிகம் . சின்மயி மற்றும் வைரமுத்து ஆகிய இருவருக்கும் உள்ள பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்தார் என வைரமுத்து மீது சின்மயி கொடுத்த புகார் சமூக வளைதள பக்கத்தில் மிகவும் வைரலாக பரவி வந்தன.

இதனைத் தொடர்ந்து அந்த விஷயம் சர்ச்சையில் முடிவடைந்தது மட்டுமில்லாமல் பாடகி சின்மயிக்கு அதன் பிறகு பாடும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டு விட்டது. இதைத்தொடர்ந்து விஜய் டிவியின் மூலம் பிரபலமான விஜே அர்ச்சனா திடீரென கவிஞர் வைரமுத்துவை சந்தித்து அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டது சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவியது. இதற்கு சின்மயி ஒரு கமெண்ட் ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் ‘இப்பொழுது தலைமேல் கை வைத்து ஆசீர்வதிப்பது போல் இருக்கும் நாளடைவில் அவை மாறுபடும். அவரிடம் பழகும் போது கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள்’ என்றும் எச்சரித்திருந்தார்.

இதுகுறித்து அர்ச்சனாவிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது ‘ என்னுடைய அப்பா ஒரு ஆசிரியர். என் வீட்டில் எல்லோருக்கும் வைரமுத்து சாரை மிகவும் பிடிக்கும். அந்த வகையில் ஒரு நாள் நான் படபிடிப்பு தளத்தில் வைரமுத்து சாரை சந்தித்தேன்.  நான் உங்களுடைய ரசிகை என்று கூறினேன். அவ்வளவுதான் ஆனால் எனக்கு சின்மயியை எந்த ஒரு தனிப்பட்ட முறையிலும் தெரியாது.

மேலும் சிலர் இப்படி தான் பேச செய்கிறார்கள் ஊர் வாயை அடைப்பது நம்மால் முடியாது. நான் வைரமுத்துவின் தீவிர ரசிகை என்ற காரணத்தினால் தான் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டேன் அவ்வளவுதான். இதை புரியாதவர்கள் பலரும் நாளுக்கு நாள் சமூக வலைதள பக்கத்தில் பல்வேறு புதிய புதிய பிரச்சனைகளை உண்டாக்கி வருகிறார்கள் ‘ என சின்மயிக்கு பதிலடி கொடுத்திருந்தார்.

தற்பொழுது அர்ச்சனா நேற்றுடன் முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரியாக கலந்து  கொண்டு டைட்டிலையும் வென்றுள்ளார். இந்நிலையில் நேற்று சின்மயி நடந்து முடிந்த பழைய பிரச்சனை குறித்து மீண்டும் பதிவு வெளியிட்டு அர்ச்சனாவை வம்புக்கு இழுத்துள்ளார். அந்த பதிவில் அவர், ‘ நான் நாசமா போனா எனக்கொரு பிரச்னையும் இல்ல.  என்று அர்ச்சனாவை குறிப்பிட்டு, அர்ச்சனா மாதிரி பெண்கள் இருக்கும் போது மோசமான ஆண்கள் தான் ஆட்சி செய்வாங்க’ என்று சர்ச்சையான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த பதிவு…

 

Begam

Recent Posts

ஐய்யோ… 5 நாட்களாக சவக்குழியில்… மரண விளிம்பிலிருந்து மீண்ட நாய் குட்டி..! நெஞ்சை உலுக்கும் நிலநடுக்க கொடூரம்…!!

வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…

1 மணத்தியாலம் ago

“நாங்க ஒன்னாத்தான் வாழ்றோம்..!” பாகிஸ்தான் தோழியை காட்டிய இந்திய மாணவி… இணையத்தில் வெடித்த கடும் மோதல்…! ஷாக்கிங் வைரல் வீடியோ…!

கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…

2 மணத்தியாலங்கள் ago

கேதன் அகர்வால் கொலை வழக்கு… “காதலனுடன் நள்ளிரவு கஃபே-வில் நெருக்கம்…” கொலையாளி சியாவின் ரகசிய ஸ்னாப்சாட்.. வீடியோ வெளியாகி அதிர்ச்சி…!

புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…

2 மணத்தியாலங்கள் ago

BIG BREAKING: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட அதிரடி உத்தரவு…!!

தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…

2 மணத்தியாலங்கள் ago

விஜய் மீது செம கடுப்பில் பாஜக மேலிடம்!.. ரெடியானது டார்கெட் லிஸ்ட்!… எந்த நேரத்திலும் பாயும் அமலாக்கத்துறை ரெய்ட்…? தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்…!!

தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…

2 மணத்தியாலங்கள் ago

TVK வைத்த ட்விஸ்ட்…! விஜய் கரூர் போகும் முன்… கைதாகிறாரா செந்தில் பாலாஜி…? திமுகவை அலறவிடும் தவெக…!”

தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…

2 மணத்தியாலங்கள் ago