CINEMA
புதுச்சேரியில் பிக்பாஸ் டீம்… ஒரு வழியா கன்ஃபார்ம்-ஆன தொகுப்பாளர்.. ரசிகர்களுக்கு செம குஷியான அப்டேட்..!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் இருந்தாலும் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் தான். கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் இதுவரை ஏழு சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ள நிலையில் கமல்ஹாசன் அனைத்து சீசன்களையும் தொகுத்து வழங்கினார்.
இந்த நிலையில் தன்னுடைய திரைப்படப் பணிகள் காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விளக்குவதாக கமல்ஹாசன் அறிவித்துள்ள நிலையில் இதனை தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார் என்று மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இந்த நிலையில் தற்போது படம் ஒன்றின் படப்பிடிப்புக்காக புதுச்சேரியில் தங்கி இருக்கும் விஜய் சேதுபதி அங்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கைலாசநாதனை சந்தித்தார்.
இயக்குனர் பாண்டியராஜ் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு தான் இது. விஜய் டிவியின் பிக் பாஸ் ப்ரொமோ டீம் தற்போது புதுச்சேரியில் தங்கி உள்ளனர். அதனால் அங்கேயே ப்ரோமோ சூட் தொடங்கி எடுக்கப்படலாம் என்று தெரிகிறது. படப்பிடிப்பின் இடையே விஜய் சேதுபதி இதற்காக நேரம் கொடுத்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. அக்டோபர் மாதம் பிக்பாஸ் தொடங்க உள்ளதாகவும் அதற்கு ஒரு மாதம் முன்னதாகவே ப்ரோமோ வெளியாகும் என்பதால் செப்டம்பர் முதல் வாரத்தில் ப்ரோமோ வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே பிக் பாஸ் நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவது தற்போது உறுதியாகி உள்ளது.