CINEMA
என்னது GOAT படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவங்க தானா?.. ஒருவேளை அவங்க மட்டும் நடிச்சிருந்தா..?
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக கலக்கி கொண்டிருப்பவர் தான் வெங்கட் பிரபு. இவர் தமிழ் சினிமாவிற்கு சென்னை 28, சரோஜா மற்றும் மங்காத்தா உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து ரசிகர்களை மகிழ்வித்துள்ளார். தற்போது இவருடைய இயக்கத்தில் விஜய் நடிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் கோட். இந்தத் திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில் யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.
மிக பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இதனால் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் கோட் திரைப்படம் குறித்து சுவாரசியமான தகவல் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
அதாவது கோட் திரைப்படத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தது ரஜினி மற்றும் தனுஷ் என தகவல் வெளியாகி உள்ளது. இதில் தந்தை கதாபாத்திரத்தில் ரஜினியையும் மகன் கதாபாத்திரத்தில் தனுஷையும் வைத்து எடுக்க வெங்கட் பிரபு திட்டமிட்டுள்ளார். ஆனால் அதன் பிறகு டீ ஏஜிங் குறித்து விஷயங்கள் வெங்கட் பிரபுவுக்கு தெரிய வர அதன் பிறகு இந்த கதையை தளபதி விஜய்க்காக கூறியுள்ளார். இப்படிதான் கோட் திரைப்படம் தொடங்கியது என தகவல் வெளியாகி உள்ளது.