CINEMA
5 மாத கைக்குழந்தையுடன் இந்தப் படத்தில் நடுக்கடலில் நடித்தேன்… எமோஷனலாக பேசிய ஜாங்கிரி மதுமிதா…
சின்ன திரையில் இருந்து வெள்ளி திரைக்கு சென்ற நடிகர் நடிகைகளுள் ஒருவர் ஜாங்கிரி மதுமிதா. இவர் விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான லொள்ளு சபாவில் நடித்ததன் மூலம் தனது திரையுலக பயணத்தை தொடங்கியவர். இது தவிர விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு போன்ற நிகழ்ச்சியிலும் தோன்றியுள்ளார் மதுமிதா. இவர் தமிழ் சினிமாவில் பெரும்பாலும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடிப்பவர் ஆவார்.
2012 ஆம் ஆண்டு உதயநிதி ஸ்டாலின், ஹன்சிகா மோத்வானி நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக அப்படத்தில் நடித்திருந்த சந்தானம் அவர்களுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் மதுமிதா. இந்த படத்தின் மூலமாகவே அவருக்கு ஜாங்கிரி மதுமிதா என்ற பெயரும் கிடைத்தது. இந்த படத்தில் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் மதுமிதா. மேலும் இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நகைச்சுவை நடிகைக்கான விகடன் விருதினை வென்றார்.
தொடர்ந்து இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ஜில்லா, தெனாலிராமன், வெள்ளக்காரதுரை, காக்கிச்சட்டை, காஷ்மோரா, இருட்டு அறையில் முரட்டு குத்து, கஜினிகாந்த், விசுவாசம், டிக்கிலோனா ஆகிய பல திரைப்படங்களில் நடித்துள்ளார் ஜாங்கிரி மதுமிதா.
இது மட்டுமல்லாமல் 2019 ஆம் ஆண்டு விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் மூன்றில் போட்டியாளராகவும் கலந்து கொண்டு பிரபலம் அடைந்தவர் ஜாங்கிரி மதுமிதா. மேலும் பல வெற்றிகரமாக ஓடிய தொலைக்காட்சி தொடர்களிலும் தோன்றியுள்ளார் மதுமிதா.
சமீபத்தில் யோகி பாபு நடிப்பில் வெளியான போட் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார் மதுமிதா. தற்போது ஒரு நேர்காணலில் இத்திரைப்படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் ஐந்து மாத கைக்குழந்தையுடன் இந்த படத்தில் நடித்ததாக கூறியிருக்கிறார்.
அவர் கூறியது என்னவென்றால், போட் படத்தின் சூட்டிங்கிற்கு நான் செல்லும்போது என்னுடைய மகனுக்கு ஐந்து மாதம் தான் ஆகி இருந்தது. என் குழந்தையை கவனிப்பதற்கு ஒரு அசிஸ்டன்டையும் கையோட கூட்டிட்டு போயிருந்தேன். போட் திரைப்படம் வந்து ஃபுல்லா கடல்ல தான் நிறைய சீன் வரும்.
அதனால தூத்துக்குடி சைடுல தான் ஷூட்டிங் இருந்தது. அதுவும் அந்த சைடு எல்லாமே கடல் பக்கத்துல ரொம்ப வெயிலா இருக்கும். அதுவும் ஏப்ரல் மே மாசம் தான் சூட்டிங் நடந்தது. பயங்கரமான வெயில் அந்த டைம்ல இருந்தது. நடுக்கடலில் தான் 33 நாள் ஷூட்டிங் நடத்தினார்கள்.
அப்போ கேரவேனில் என் குழந்தையை விட்டுட்டு நான் அவன்கிட்ட சொல்லிட்டே போவேன். அம்மா எப்ப வருவேன்னு தெரியாது. நீ பசிச்சா பொறுத்துக்கோ தூங்கிக்கோ அப்படின்னு அவன் காதுல சொல்லிட்டு போவேன். நான் பிரக்னண்டா இருக்கும்போதே வயித்துல என் பையன் இருக்கும்போதே சொல்லிக்கிட்டே இருப்பேன் எனக்கு சினிமா தான் ரொம்ப முக்கியம்னு சொல்லுவேன். என் அசிஸ்டன்ட் பாத்துக்குவாங்க நான் ஷார்ட் முடிஞ்ச உடனே அங்க கடல்ல இருந்தாலுமே அங்கிருந்து பார்த்துகிட்டே இருப்பேன் ஏதாவது ஒரு எமர்ஜென்ஸ்னா நீங்க கையையோ துணியோ வச்சு கைய மேல தூக்கி அசையுங்க நான் வந்துருவேன் அப்படின்னு அசிஸ்டன்ட் கிட்ட சொல்லிட்டு போவேன்.
அப்படி ஏதாவது எமர்ஜென்சினா அவங்க தூரமா அங்கிருந்து கையை காட்டுவாங்க உடனே நான் டைரக்டர் கிட்ட பர்மிஷன் வாங்கிட்டு நான் அவங்க போய் பார்ப்பேன். டைரக்டர் எல்லாத்துக்குமே தெரியும் தான் நான் கைக்குழந்தையை வைத்திருக்கிறேன் என்று. ஆனா அவங்க வந்து சூட் எடுக்குற பிசில எல்லா நேரமே அவங்க ஞாபகம் வச்சிருக்க மாட்டாங்க. சீனுக்குள்ள போய்ட்டாங்கன்னா அவங்க அதே மைண்ட்ல தான் இருப்பாங்க. அப்புறம் படலாம் முடிஞ்ச பிறகு டைரக்டர் ப்ரொடியூசர் எல்லாருமே கைக்குழந்தையை வச்சிட்டு நீ நல்லா நடிச்சிருக்க அப்படினு பாராட்டுனாங்க என்று பகிர்ந்துள்ளார் ஜாங்கிரி மதுமிதா.