Categories: சினிமா

உங்கள பார்த்ததும் இல்ல, சந்திச்சதும் இல்ல.. உங்க அன்புக்காக ஏங்கினேன்.. ஷெரின் வீட்டில் ஏற்பட்ட மரணம்.. சோகத்தில் குடும்பம்..!

Spread the love

பிரபல நடிகையான ஷெரின் தனது தந்தை மறைவு குறித்து உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார் இது இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகின்றது. கர்நாடகாவை பூர்வீகமாகக் கொண்ட ஷெரின் தமிழ் சினிமாவில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருப்பார். செல்வராகவன் இயக்கிய இப்படத்தில் பள்ளி மாணவியாக நடித்த அசத்தியிருப்பார்.

அந்த திரைப்படம் ஹிட்டானதை தொடர்ந்து ஜேடி ஜெர்சி இயக்கத்தில் விசில் என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் வெளியான அழகிய அசுரா பாடல் மிகவும் பிரபலமானது. அதனை தொடர்ந்து தமிழ் திரைப்படங்கள் ஹிட்டு கொடுக்காத காரணத்தினால் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடிக்க தொடங்கினார். நீண்ட இடைவெளிக்கு பிறகு பீமா படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடியே செரின் பிறகு தமிழ் சினிமா பக்கமே தலை காட்டாமல் இருந்து வந்தார்.

பல ஆண்டுகள் கழித்து நண்பேண்டா என்ற திரைப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்திருந்தார். அதில் உடல் எடை அதிகரித்து இருந்த அவரை பார்த்து யாருக்கும் பெரிதாக அடையாளம் தெரியவில்லை. இதையடுத்து 2019 ஆம் ஆண்டு கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு உடல் எடையை குறைத்து ஸ்லிமாக மாறிய இவர் விஜய் டிவியில் மிகப் பாப்புலராக இருந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு தனது சமையல் திறமையை வெளிப்படுத்தினார்.

தற்போது ரஜினி என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்நிலையில் தனது தந்தையின் மறைவு குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை ஷெரின் ஒரு உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது “நான் உன்னை மிகவும் நேசித்தேன்.  என் வாழ்நாள் முழுவதும் உனது அன்பிற்காக ஏங்கினேன்.

ஒரு வாரத்திற்கு முன்பே நீங்கள் இறந்து விட்டீர்கள். ஆனால் இன்று தான் எனக்கு தகவல் கிடைத்தது. அதைக் கேட்டு நான் மனமுடைந்து போனேன். உங்களது இந்த படம் தான் என்னிடம் உள்ளது. இது என்னிடம் எப்போதும் இருக்கும். மிஸ் யூ என்று பதிவை வெளியிட்டு இருக்கின்றார். தந்தையை விவாகரத்து செய்த பிறகு தனது தாயுடன் ஷெரின் வாழ்ந்து வருகிறார். ஆனால் தனது தந்தையின் மறைவு குறித்த தகவலை ஒரு வாரத்திற்கு பிறகு தான் அவருக்கு தெரிய வந்துள்ளது. இதை கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்த ஷெரின் இந்த பதிவை வெளியிட்டு இருக்கின்றார்.

Mahalakshmi

Recent Posts

ஆதார் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. ஜூன் 14-க்குள் இதைச் செய்யாவிட்டால் கட்டணம் வசூலிக்கப்படும்..!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…

3 மணத்தியாலங்கள் ago

“உலகத்தைச் சீரழிக்கும் கொடுங்கோலர்கள்” வளங்களைச் சுரண்டி ஆயுதங்களில் முதலீடு… டொனால்ட் ட்ரம்பை மறைமுகமாகச் சாடிய போப்..!!

உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…

3 மணத்தியாலங்கள் ago

“பிளான் பி” தயாரா…? எடப்பாடி தொகுதியில் விஜய்யின் அடுத்த மூவ் என்ன…? கலக்கத்தில் அதிமுக…!!

சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…

5 மணத்தியாலங்கள் ago

ஐஐஐடி படிப்பு.. ஆண்டுக்கு 17 லட்சம் சம்பளம்…. ஆனாலும் வேலையை விட்டது ஏன்….? வைரலாகும் இளைஞரின் உருக்கமான பதிவு…!!

டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…

5 மணத்தியாலங்கள் ago

இன்னும் ஒரு வாரம் தான் டைம்…. எனக்காக இதைச் செய்யுங்க…! பெண்களுக்கு விஜய் விடுத்த ‘விசில்’ கோரிக்கை…!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…

5 மணத்தியாலங்கள் ago

“தீட்டு” – உயிரை விட மேலானதா?… என் அம்மாவிற்கு நேர்ந்தது இன்று அந்தப் பெண்ணிற்கு மரணம்… சமூகத்தின் கண்களைத் திறக்கப்போகும் ஒரு பதிவு…!!!

மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை  வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…

5 மணத்தியாலங்கள் ago