Categories: சினிமா

உலகத்துல எங்கயாவது உதவி இயக்குனரின் புகைப்படத்தைப் போட்டு போஸ்டர் அடிப்பாங்களா?… பாரதிராஜா காட்டிய வெறித்தன மாஸ்!

Spread the love

தமிழ் சினிமாவின் போக்கை மாற்றிய ஒரு சில இயக்குனர்களில் பாரதிராஜாவும் ஒருவர். அவர் இயக்கத்தில் வெளியான 16 வயதினிலே திரைப்படம் தமிழ் சினிமாவையே புரட்டி போட்டது. தொடர்ந்து ரத்தமும் சதையுமான கிராமிய மணம் கொண்ட படங்களை கொடுத்து தமிழ் சினிமா ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்டார்.

அவர் தன்னை ஒரு இயக்குனராக நிலைநிறுத்திக் கொண்ட பின்னரும் தனது படங்களுக்கு முன்னணி நடிகர்களை தேடி செல்லாமல் புதுமுக நடிகர்களையே பெரும்பாலும் பயன்படுத்தினார். ஆனால் தான் இயக்கிய முதல் மரியாதை படத்துக்கு அந்த பாத்திரத்தை உணர்ந்து நடிக்க வேண்டிய ஒரு நடிகர் தேவை என்பதால் சிவாஜி கணேசனை தேடிச் சென்றார்.

பாரதிராஜாவின் வளர்ச்சி எப்படிப்பட்ட அசுரவளர்ச்சியாக இருந்தது என்பதற்கு ஒரு தகவலை சொல்லலாம். சமீபத்தில் பாரதிராஜாவின் உதவி இயக்குனராக இருந்தவரும் பத்திரிக்கையாளருமான சித்ரா லட்சுமணன் இந்த தகவலை தன்னுடைய யுடியூப் சேனலில் பகிர்ந்துள்ளார்.

பாரதிராஜா இயக்குனர் ஆவதற்கு முன்னால் தமிழ் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் சில படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றியுள்ளார். அப்படி அவர் பணியாற்றிய படங்களில் ஒன்றுதான் அதிர்ஷ்டம் அழைக்கிறது. அந்த படத்தில் தேங்காய் சீனிவாசன் கதாநாயகனாக நடிக்க சௌகார் ஜானகி உள்ளிட்டவர்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். படத்தை ஏ ஜெகநாதன் இயக்கியுள்ளார். இந்த படம் ரிலீஸின் போது பெரிய வெற்றி பெறவில்லை.

இதற்கிடையில் பாரதிராஜா 16 வயதினிலே திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டார். அவரின் அடுத்தடுத்த படங்கள் வரிசையாக ஹிட்டாகிவந்தன. இந்நிலையில் அதிர்ஷ்டம் அழைக்கிறது படத்தை ரி ரிலீஸ் செய்துள்ளனர். அப்போது அந்த படத்தில் நடித்தவர்கள் யாருக்குமே மிகப்பெரிய மாஸ் இல்லை. அதனால் பாரதிராஜாவின் புகைப்படத்தை போஸ்டரில் “அசோசியேட் டைரக்டர்” எனப் போட்டுள்ளனர்.

அந்தளவுக்கு பாரதிராஜா தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தாராம். இந்த தகவலைப் பகிர்ந்த சித்ரா லட்சுமணன் அந்த போஸ்டரையும் பகிர்ந்துள்ளார். அந்த போஸ்டர் உங்கள் பார்வைக்காக..

vinoth

Recent Posts

ஆதார் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. ஜூன் 14-க்குள் இதைச் செய்யாவிட்டால் கட்டணம் வசூலிக்கப்படும்..!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…

4 மணத்தியாலங்கள் ago

“உலகத்தைச் சீரழிக்கும் கொடுங்கோலர்கள்” வளங்களைச் சுரண்டி ஆயுதங்களில் முதலீடு… டொனால்ட் ட்ரம்பை மறைமுகமாகச் சாடிய போப்..!!

உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…

4 மணத்தியாலங்கள் ago

“பிளான் பி” தயாரா…? எடப்பாடி தொகுதியில் விஜய்யின் அடுத்த மூவ் என்ன…? கலக்கத்தில் அதிமுக…!!

சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…

6 மணத்தியாலங்கள் ago

ஐஐஐடி படிப்பு.. ஆண்டுக்கு 17 லட்சம் சம்பளம்…. ஆனாலும் வேலையை விட்டது ஏன்….? வைரலாகும் இளைஞரின் உருக்கமான பதிவு…!!

டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…

6 மணத்தியாலங்கள் ago

இன்னும் ஒரு வாரம் தான் டைம்…. எனக்காக இதைச் செய்யுங்க…! பெண்களுக்கு விஜய் விடுத்த ‘விசில்’ கோரிக்கை…!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…

7 மணத்தியாலங்கள் ago

“தீட்டு” – உயிரை விட மேலானதா?… என் அம்மாவிற்கு நேர்ந்தது இன்று அந்தப் பெண்ணிற்கு மரணம்… சமூகத்தின் கண்களைத் திறக்கப்போகும் ஒரு பதிவு…!!!

மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை  வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…

7 மணத்தியாலங்கள் ago