விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில் இந்த முறை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய நிலையில் இன்னும் மூன்று வாரங்களில் முடிவுக்கு வரவுள்ளது. இறுதி கட்டத்தை பிக் பாஸ் நிகழ்ச்சியில் நெருங்கி வருவதால் எந்த வாரம் பிக் பாஸ் போட்டியாளர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ஃப்ரீஸ் டாஸ்க் மூலம் அவர்களுடைய குடும்பத்தினரை வீட்டிற்குள் அனுப்பி வைத்து பிக் பாஸ் இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
அதனைப் போலவே சௌந்தர்யாவின் கிரஷ் விஷ்ணு, அருண் பிரசாத்தின் காதலி அர்ச்சனா, விஜய் டிவி தொகுப்பாளர் மற்றும் பேச்சாளர் மகேஷ், பவித்ராவின் தோழி உட்பட ஒரு சில போட்டியாளர்கள் கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திருந்தனர். இதனை ஒட்டுமொத்த போட்டியாளர்களும் கொண்டாடினர். இப்படி மிகவும் மகிழ்ச்சியாக சென்றபோது எலிமினேஷன் என்பது பிக் பாஸ் நிகழ்ச்சியில் தவிர்க்க முடியாத ஒன்று. அப்படி கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து இரண்டு பேர் எலிமினேஷன் செய்யப்பட்ட நிலையில் சனிக்கிழமை ஜெஃப்ரி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
அவரைத் தொடர்ந்து நேற்று யார் வெளியேற்றப்படுவார் என்று ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. இதனைத் தொடர்ந்து போட்டியாளர் அன்ஷிதா நேற்று பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இன்னும் பினாலே நடக்க மூன்று வாரங்களுக்குள் தான் இருப்பதால் தற்போது இறுதிக்கட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் பத்து போட்டிகள் நடத்தப்படும். அதில் வெற்றியடையும் போட்டியாளர் நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவார்.
கடைசி வார நாமினேஷனில் மட்டுமே அவர் உள்ளே செல்வார். இந்த வாரம் ரசிகர்களிடம் டிஆர்பி அதிகரிக்கும் என பல வித்தியாசமான டேஸ்க்களை போட்டியாளர்களுக்கு கொடுக்க பிக் பாஸ் முடிவு செய்துள்ளார். அதன்படி இந்த வாரம் தொடங்கப்பட்ட முதல் டாஸ்கில் சௌந்தர்யா வெற்றி பெற்றுள்ளார். மேலும் இந்த வாரம் நாமினேஷனில் முத்துக்குமார் மற்றும் சௌந்தர்யா இடம்பெறவில்லை. இந்நிலையில் இன்று “டிக்கெட் டூ பினாலே” டாஸ்க் தொடங்கிவிட்டது. இதில் போட்டியாளர்கள் விறுவிறுப்பாக விளையாடி வருகிறார்கள்.
View this post on Instagram